லீகல் தெரியும்.. மெடிக்கல் தெரியும்னு.. சில ஜோக்கர்கள் சொல்வாங்க.. நயன்தாராவுக்கு வனிதா ஆதரவு!
சென்னை: இரண்டு அழகான ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகியிருக்கீங்க, உலகத்தில் பல குழந்தைகளுக்கு கிடைக்காத அத்தனையும் அந்த குழந்தைகளுக்கு கண்டிப்பா கிடைக்க போகுது, இந்த சந்தோஷமான தருணத்தை கெடுப்பவர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை என நயன்தாராவுக்கு பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ள போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.
பிறரது சொந்த வாழ்க்கையை பற்றி மூக்கை நுழைப்பதே சில ஜென்மங்களுக்கு வேலையாக இருக்கும் அது கூட சட்டப்படி குற்றம் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை என வெளுத்து வாங்கி உள்ளார்.
மேலும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குழந்தைகளுடன் உங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள் என வாழ்த்தி உள்ளார்.

இரண்டு லட்டு
இயக்குநர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியான நிலையில், உடனடியாக தனது திருமண அறிவிப்பையும் வெளியிட்டார் நயன்தாரா. ஜூன் 9ம் தேதி திருமணமான நிலையில், அக்டோபர் 9ம் தேதி விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அழகான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக மாறியுள்ளனர் என்கிற செய்தி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வாழ்த்தும் ட்ரோல்களும்
ஒரு பக்கம் நயன்தாரா அம்மாவான சந்தோஷம் அறிந்து நடிகர் கவின், டிடி நீலகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து சொல்லி வந்த நிலையில், இன்னொரு புறம் எப்படி நயன்தாரா அதற்குள் குழந்தைப் பெற்றார்? என்கிற கேள்வியை எழுப்பி ஏகப்பட்ட ட்ரோல்களும் பறந்தன. வாடகைத்தாய் சர்ச்சையும் பூதாகரமாக வெடித்தது.

வாழ்த்திய வனிதா
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்துள்ள நிலையில், அதை பற்றி விமர்சிக்க ஆரம்பித்துள்ள வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் வாழ்த்து தெரிவித்து ஒரு சூப்பர் போஸ்ட் போட்டுள்ளார். இதை விட உலகில் வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும். இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகியுள்ள விக்கி நயனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

லீகல் தெரியும் மெடிக்கல் தெரியும்னு
அதே சமயத்தில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரா? அது சட்டப்படி சரியா? என விவாதங்களும் கிளம்பியுள்ள நிலையில், அப்படி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லீகல் தெரியும் மெடிக்கல் தெரியும்னு சில முட்டாள்கள் உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவார்கள், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள் என வாழ்த்தி உள்ளார்.

வனிதா பற்றியும்
வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையும் சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமாக விமர்சித்து பேசியிருந்தனர். வனிதா விஜயகுமார் செய்து கொண்ட திருமணங்கள், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே நடைபெற்ற பிரச்சனை, பீட்டர் பால் உடன் கடைசியாக நடந்த திருமணம் மற்றும் பின்னர் அவரை பிரிந்தது என ஏகப்பட்ட சர்ச்சைகளையும் கடந்து வாழ்ந்து வரும் வனிதா நடிகை நயன்தாராவுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்துள்ள நிலையில், சரியாக சொன்னீங்க வனிதா என பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











