குல தெய்வம் கோயிலில் ஜோடியாக சாமி தரிசனம்... திருமணத்திற்கு தயாராகும் நயன்தாரா – விக்கி ஜோடி

சென்னை : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும், அவரின் காதலரும் டைரக்டருமான விக்னேஷ் சிவனும் ஜோடியாக குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகின்றன.

Recommended Video

பொங்கல் வைத்த Nayanthara, திருமணத்திற்கு தயாராகும் Nayan-Wikki #Kollywood | FilmiBeat Tamil

கோலிவுட்டின் டாப் காதல் ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, தங்களின் காதலை ஓப்பனாக மீடியாக்களிடம் சொன்ன பிறகு ஒன்றாக சேர்ந்து வெளிநாடுகளுக்கு அடிக்கடி டூர் போய் வந்தனர். எப்போ திருமணம் என பல ஆண்டுகளாக கேட்டு வந்தவர்களுக்கு சமீபத்தில் தான் குட் நியூஸ் சொல்லி உள்ளனர்.

பட ரிலீசுக்கு பின் திருமணம்

பட ரிலீசுக்கு பின் திருமணம்

கடந்த சில ஆண்டுகள் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வரும் இந்த காதல் ஜோடி, ஒன்றாக தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி படங்கள் தயாரித்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் தான் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை முடித்த பிறகு தான் திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததால், படம் ரிலீசானதும் திருமண தேதியை அறிவித்தனர்.

திருமண தேதி அறிவிப்பு

திருமண தேதி அறிவிப்பு

பல மாதங்களாக பல கோயில்களுக்கும் ஜோடியாக சென்று வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி, சமீபத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்த கையோடு, ஜுன் 9 ம் தேதி தங்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக அறிவித்தனர். முதலில் மிக பிரம்மாண்டமாக தான் இவர்களின் திருமணத்தை நடத்த திட்டமிட்டதாகவும், பிறகு முடிவை மாற்றி திருமணத்தை எளிமையாகவும், வரவேற்பை பிரம்மாண்டமாகவும் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குலதெய்வ கோயிலில் வழிபாடு

குலதெய்வ கோயிலில் வழிபாடு

இந்த சமயத்தில் இன்று இந்த ஜோடி திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது. என்ன விபரம் என விசாரித்த போது, விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை வழுத்தியூரில் உள்ளதாம். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தான் இவர்கள் திருச்சி வந்ததாக கூறப்படுகிறது. திருமண பத்திரிக்கை உள்ளிட்ட திருமண பொருட்களை குலதெய்வ கோயிலில் வைத்து வழிபாடு செய்வதற்காக அவர்கள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

திருமணத்திற்கு தயாராகும் ஜோடி

திருமணத்திற்கு தயாராகும் ஜோடி


ப்ளூ கலர் சுடிதாரில் கையில் ஒரு பெரிய பையுடன் வந்திருந்தார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் வழக்கம் போல் சிம்பிளாக ஒயிட் டி ஷர்ட் - ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். தஞ்சை அருகே பாபநாசம் வழுத்தூர் கிராமத்து கோயிலில் நயன்தாராவுடன், விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்த போட்டோக்கள் மற்றும் வீடியோ வெளியாகி செக டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X