நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்தது...யாரெல்லாம் கலந்துட்டாங்க...முழு லிஸ்ட் இதோ

சென்னை : நடிகை நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Recommended Video

பிரம்மாண்டமாக நடைபெற்ற Nayanthara – Vignesh Shivan திருமணம்! #Celebrity | Filmibeat Tamil

ரஜினி, ஷாருக்கான் போன்ற பெரிய நடிகர் முதல், சிறிய நடிகர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. பல கட்டுப்பாடுகளுடன், திருமணத்திற்கு வந்தவர்களிடம் இருந்த அழைப்பிதழில் இருந்த பார் கோடுகள் சரிபார்க்கப்பட்டு, மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டது.

 நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்தது

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்தது

கெட்டி மேளம் முழங்க சரியாக 10.25 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில், விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். நேரிலும், சோஷியல் மீடியாவிலும் பலரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் திருமணத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஐபி.,க்கள் முழு லிஸ்ட்

விஐபி.,க்கள் முழு லிஸ்ட்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, அட்லி, ப்ரியா அட்லி, எஸ்ஜே சூர்யா, சரத்குமார், விஜய் சேதுபதி, மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், மோகன் ராஜா, உதயநிதி ஸ்டாலின், ஷாலினி அஜித், நெல்சன் திலீப்குமார், அனிருத், டிடி, சரண்யா பொன்வண்ணன், திலீப், கலா மாஸ்டர், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விஜய் கலந்து கொள்வாரா

விஜய் கலந்து கொள்வாரா

இன்னும் சில விஐபிக்கள் இவர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்திற்கு பதில் அவரது மனைவி ஷாலினி அஜித் கலந்து கொண்டார். இதனால் விஜய், கமல் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 மொபைல் போனுக்கு அனுமதியில்லை

மொபைல் போனுக்கு அனுமதியில்லை

விஐபிக்கள், விவிஐபிக்கள் என்று தரம் பிரித்து நடிகர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். விஐபி வரிசையில் ரஜினிகாந்த், சரத்குமார், ஆகியோர் மொபைல் போனுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மற்ற முன்னணி நடிகர்கள், சிறிய நடிகர்கள், அவர்களின் குடும்பத்தினர்களிடம் மொபைல் போன்கள் வாங்கி வைக்கப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X