Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் விவிஐபிக்கள்...ரஜினிகாந்த், ஷாருக்கான் பங்கேற்பு
சென்னை : நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்.
Recommended Video
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று நடக்கிறது. மாமல்லபுரத்தில் உள்ள Sheratorf Grand resort ல் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. காலை 8.30 மணி துவங்கி 9.30 மணி வரை முகூர்த்தம் என்று சொல்லப்பட்டிருந்தாலும், காலை 10.30 மணி வரை இந்த திருமண நிகழ்வுகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் விவிஐபிக்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது.
Nayanthara Wedding: கொட்டுடா மேளத்த.. பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்!

ரஜினி, ஷாருக்கான் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் நடைபெறும் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் திலீப், கிங்ஸ்லி, நடிகை சரண்யா பொன்வண்ணன், கலா மாஸ்டர், டைரக்டர்கள் மணிவண்ணன், கே.எஸ்.ரவிக்குமார், டிவி தொகுப்பாளர் டிடி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

நயன்தாராவுடன் நடித்த ஹீரோக்கள்
ரஜினிகாந்த்துடன் தர்பார், சிவாஜி, அண்ணாத்த போன்ற படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜவான் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதே போல் சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, கிங்ஸ்லி, கலா மாஸ்டர் போன்றோர் நடித்துள்ளனர். நயன்தாராவுடன் இதுவரை நடித்த ஹீரோக்கள் பலருக்கும் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து யார் வர போகிறார்
கமல், சிரஞ்சீவி, விஜய், அஜித் ஆகியோர் வர உள்ளதாக கூறப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து யார் வர போகிறார், இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். திருமண போட்டோக்கள் எப்போது வெளியாகும் என பலரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

15 புரோகிதர்கள் வருகை
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக பல்வேறு கோயில்களில் இருந்து 15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் திருமணம் நடைபெறும் ரிசார்ட்டிற்கு வந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வந்துள்ளனர்.

80 பவுன்சர்கள் பாதுகாப்பு
பலத்த பாதுகாப்பு, பல கட்டுப்பாடுகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடைபெறும் கண்ணாடி மண்டபத்தை சுற்றி 80 க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மீடியாக்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், திருமண போட்டோக்களை பிற்பகலுக்கு பிறகு சோஷியல் மீடியாவில் தாங்களே வெளியிட உள்ளதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி உள்ளார்.