Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பரிகாரங்களின் பலன்..நயன்தாரா-விக்னேஷ் சிவன் மண வாழ்க்கை எப்படி இருக்கும்? எண் கணித நிபுணரின் கணிப்பு
சென்னை: காதல் பறவைகள் நயன்தாரா விக்னேஷ் சிவன் இன்னும் சில நாட்களில் திருமண பந்தத்தில் இணையப்போகின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? வெற்றிகரமான தம்பதிகளாக திகழ்வார்களா என கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி அறிவித்துள்ளது. ஜூன் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல விஐபிக்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்களில் திருமணம் என்றாலே அது ஊடகங்களில் பரபரப்பாக எழுதப்படும். சமூக வலைத்தளங்களில் அதுதான் ட்ரெண்டிங் ஆக இருக்கும். சமீபத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண செய்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். மகிழ்ச்சிகரமான காதலர்களாக இருக்கும் இவர்கள் மண வாழ்க்கையில் இணைந்த பிறகு எப்படி இருப்பார்கள் என்று பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
அயன் தேவா தான் ரோலக்ஸா? நெட்டிசன்களின் கண்டுபிடிப்பு.. மீண்டும் கிளம்பிய அன்றே கணித்தார் சூர்யா!

நயன்தாரா
நயன்தாரா நவம்பர் 18,1984 ஆண்டு பிறந்துள்ளார். அவரது இயற்பெயர் டயானா மரியா குரியன். விக்னேஷ் சிவன் செப்டம்பர் 18,1985ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவர்கள் இருவரின் பிறந்த எண்ணின் முதல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகை 9 வருகிறது. திருமண தேதியும் 9 வருகிறது. அதே நேரத்தில் 18/11/1984 கூட்டுத்தொகை 5 ஆக உள்ளது.
Recommended Video

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் 18/09/1985ஆம் ஆண்டு பிறந்தார். இந்த எண்ணின் கூட்டுத் தொகை 5ஆக வருகிறது. இவரின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறையை சேர்ந்தவர்கள். இவரின் தந்தை காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர். இவரின் அம்மா வடபழனியில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். விக்னேஷ் சிவன் தன்னுடைய பள்ளி படிப்பை மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலும் தனது கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் முடித்தார்.

காதல் பறவைகள்
விக்னேஷ் சிவன் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். தனுஷ் தயாரிப்பில் 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் திரைப்படத்தினை இயக்கிய பின்னர் அனைவரின் கவனம் ஈர்த்தார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார். எட்டு ஆண்டு கால காதல் கல்யாணத்தில் முடியப்போகிறது.

மண வாழ்க்கை எப்படி
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரே குணாதிசயம் கொண்டவர்கள் ஒரு உறைக்குள் இரண்டு கத்திதான். காரணம் இருவரின் எண்களின் கூட்டுத்தொகையும் ஒரே மாதிரியாக உள்ளது. காதலர்களாக சுற்றித்திரியும் இருவரும் இப்போது திருமண பந்தத்தில் இணையப்போகிறார்கள். திருமணம் செய்து கொள்ளப்போகும் தேதி 09/06/2022 கூட்டுத் தொகை 3 வருகிறது. இது சிறப்பானது அல்ல என்றும் 50 சதவிகிதம் மட்டுமே வெற்றியைத் தரும் என்றும் பிரபல எண் கணித நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இணைத்து வைத்த இறைவன்
விக்னேஷ் சிவன் கன்னி ராசிக்காரர். நயன்தாரா சிம்ம ராசியில் பிறந்தவர். இருவருமே இப்போது திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஜாதகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தாமதமாக திருமணம் நடைபெறுகிறது. கடந்த பல ஆண்டுகாலமாகவே இருவரும் இணைந்து பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு பரிகாரங்களைச் செய்துள்ளனர். சமீபத்தில் கூட குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார் நயன்தாரா. முழுக்க முழுக்க தமிழ் பெண்ணாகவே மாறி விட்டார் நயன்தாரா. இத்தனை ஆண்டுகாலம் காதலித்தவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாகவே புரிந்து கொண்டுதான் மண வாழ்க்கையில் இணைகின்றனர். இவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக மாற பரிகாரங்கள் கை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.