Don't Miss!
- News
உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே
- Sports
விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??
- Lifestyle
இந்த 4 ராசிக்காரர்களால் காதலில் ஏமாற்றாமல் இருக்க முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தப்பாச்சே.. குளிகை நேரத்தில் திருமணம் செய்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. என்ன பலன் ஏற்படுமாம் தெரியுமா?
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கோலகலமாக நடைபெற்றுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தைப் பற்றிதான் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். தங்களின் திருமணத்திற்காக ஒரு லட்சம் பேருக்கு விருந்து போட்டிருக்கிறார்கள். ஐந்து புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியது நல்ல நேரமா? என்று பலரும் இப்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
Recommended Video
சினிமா பிரபலங்களில் திருமணம் என்றாலே அது ஊடகங்களில் பரபரப்பாக எழுதப்படும். சமூக வலைத்தளங்களில் அதுதான் ட்ரெண்டிங் ஆக இருக்கும். நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண செய்திதான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக பேசி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களைப் பதிவிட்டு வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர் அவர்களின் ரசிகர்கள்.
ஓடிடியில்
'விக்ரம்'
ரிலீஸாகும்
போது
அந்த
சீன்
இருக்கும்...படக்குழு
வெளியிட்ட
சுவாரசியத்
தகவல்
!
பல ஆண்டுகள் காதலித்து கோவில் கோவிலாக போய் பரிகாரம் செய்து பல புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத என்னதான் பார்த்து பார்த்து கல்யாணம் நடந்தாலும் ஜோதிட சாஸ்திரப்படி சில தவறுகள் நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகின்றன.

திருமண தேதி ஜூன் 9,2022
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் கடலோரத்தில் பிரம்மாண்ட கண்ணாடி மாளிகையில் நடந்துள்ளது.
திருமணம் நடைபெற்ற தேதியின் கூட்டுத் தொகை 3 வருவதால் சிறப்பானது அல்ல என்றும் 50 சதவிகிதம் மட்டுமே வெற்றியைத் தரும் என்று கணித்திருந்தனர். வியாழக்கிழமை சரியான நாள் அல்ல என்றும் அதோடு குளிகை நேரத்தில் திருமணம் நடந்தது என்றும் கூறி வருகின்றனர்.

தாலி கட்டிய நேரம்
ஜூன் 9ஆம் தேதியன்று வியாழக்கிழமை காலை 10.20 மணிக்கு நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை குளிகை நேரம் வருகிறது. அந்த நேரத்தில் எது செய்தாலும் திரும்ப திரும்ப நடைபெறும் என்பது ஜோதிட விதியாகும்.

புதன்ஹோரையில் திருமணம்
வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை புதன்ஹோரை நேரமாகும். அந்த நேரத்தில் திருமணம் நடந்துள்ளது. கௌரி பஞ்சாங்கப்படி பார்த்தால் அந்த நேரம் சோரம் என்று உள்ளது. மொத்தத்தில் பிரம்மாண்டமாக பார்த்து பார்த்து நடைபெற்ற திருமணத்தில் பலவித குளறுபடிகள் நடந்துள்ளதாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

கைகொடுக்கும் பரிகாரங்கள்
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜாதகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவேஇருவரும் இணைந்து பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு பரிகாரங்களைச் செய்துள்ளனர். சமீபத்தில் கூட குல தெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளார் நயன்தாரா. முழுக்க முழுக்க இந்து பெண்ணாகவே மாறி விட்டார் நயன்தாரா. இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் சில குறைகள் இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பரிகாரங்கள் கை கொடுக்க வேண்டும் என்பதே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.