Don't Miss!
- News
இடுப்பளவு மனிதனின்.. இமாலய சாதனை.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்த.. அம்மாவின் "ஒரே வார்த்தை"
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
நயன்தாரா vs சன்னி லியோன்.. ஆண்டு இறுதியில் பேயாட்டம் ஆட காத்திருக்கும் டாப் ஹீரோயின்கள்!
சென்னை: பேய் படங்கள் எல்லாம் பார்த்து ரொம்ப போரடித்துப் போன நிலையில், இன்னமும் அந்த டிரெண்டை பிடித்துக் கொண்டு ஆண்டு இறுதியில் பேயாட்டம் ஆட இரண்டு டாப் ஹீரோயின்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹாலிவுட் படம் கான்ஜுரிங் ரேஞ்சுக்கு கனெக்ட் படத்துடன் இந்த வாரம் நயன்தாரா கதிகலங்க வைக்க காத்திருக்கிறார்.
அதே போல அடுத்த வாரம் ஓ மை கோஸ்ட் படத்துடன் கவர்ச்சி காட்டேரியாக ரசிகர்களை திணறடிக்க சன்னி லியோன் தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்ட்ரி கொடுக்கிறார்.
2022ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு மொக்கை வாங்கிய படங்கள்... லிஸ்ட்ல இந்தப் படம் தான் டாப்!

மிரட்டும் பேய் படங்கள்
பேய், பிசாசு இல்லை என அறிவு ரீதியாக சொன்னாலும், அமானுஷ்ய படங்களுக்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. கரன்ட் கட் ஆனாலும், இன்வெர்ட்டர் ஓடும் இந்த காலத்திலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் க்ளோஸ் அப் ஷாட்டில் ஹீரோயின் நடந்து செல்ல பின்னாடி திகிலூட்டும் பேய் வாம்மா மின்னல் என்கிற ரேஞ்சுக்கு யாரை பார்த்து பயந்து ஓடுது என்றே தெரியாத அளவுக்கு படங்கள் வந்தாலும், கண்களை ஒரு கையால் மறைத்துக் கொண்டும், கண்ணாடி அணிந்து கண்களை மூடிக் கொண்டும் படம் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

மீண்டும் பேய் படத்தில் நயன்
மாயா படம் நயன்தாராவுக்கு சோலோ ஹீரோயின் அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. ஆனால், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான டோரா, ஐரா உள்ளிட்ட பேய் படங்கள் சொதப்பின. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள கனெக்ட் படத்தில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. அந்த படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது.

ஹாலிவுட் படம் அளவுக்கு
ஹாலிவுட்டில் வெளியான காஞ்சுரிங், பாரானர்மல் அக்டிவிட்டி உள்ளிட்ட படங்கள் அளவுக்கு நயன்தாராவின் கனெக்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போதாக் குறைக்கு கொரோனா வைரஸையும் இயக்குநர் அஸ்வின் சரவணன் கதைக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், படம் நிச்சயம் ரசிகர்களை மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்னி லியோன் பராக்
இந்த வாரம் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் வெளியாகும் நிலையில், அடுத்த வாரம் இன்னொரு பேய் படத்துடன் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் பழங்காலத்து ராணி எப்படி பேயாக மாறினார் என்றும் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்ட நடிகர்கள் அந்த பேயிடம் இருந்து எப்படி சிக்கித் தப்பிக்க போகின்றனர் என்கிற கதையுடன் அந்த படம் இருக்கும் என தெரிகிறது.

காமெடி பேய்
நயன்தாராவின் கனெக்ட் பேய் படம் வெறும் ஹாரர் படமாக வந்து ரசிகர்களை பயமுறுத்த உள்ள நிலையில், சன்னி லியோனின் பேய் படம் காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலே ரசிகர்களை குஷிப்படுத்திய ஜிபி முத்து இந்த படத்தில் என்ன காமெடி பண்ண காத்திருக்கிறார் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக வெயிட் செய்து வருகின்றனர்.

ஆண்டு இறுதியில் பேயாட்டம்
இந்த ஆண்டு பெரிதாக எந்தவொரு பேய் படமும் சொல்லிக் கொள்ளும் படி வெளியாகவில்லை. இந்நிலையில், ஆண்டு இறுதியில் இப்படி டாப் ஹீரோயின்கள் இருவரது பேய் படங்கள் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களை அந்த படங்கள் எந்த அளவுக்கு என்டர்டெயின் செய்யப் போகுது என்றும் யார் பாக்ஸ் ஆபிஸில் கலக்கப் போகிறார் என்பதையும் வெயிட் பண்ணி பார்ப்போம்..