திருமண புடவையில் தேவதையாய் ஜொலித்த நயன்.. கைய கவனிச்சீங்களா? வெளியானது திருமண புகைப்படம் !

சென்னை : நடிகர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

Nayanthara Wedding | Red Saree-யில் ஜொலிக்கும் Nayanthara *Celebrity | Filmibeat Tamil

இந்த திருமணத்தில் பங்கேற்க முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

6 வருடங்களாக காதலித்து வந்த இந்த காதல் ஜோடி இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நயன்தாரா திருமணம்

நயன்தாரா திருமணம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான், இயக்குநர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சரத்குமார், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் ஹரி, கலா மாஸ்டர், விஜய் டிவி டிடி, உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

நெற்றியில் முத்தம்

நெற்றியில் முத்தம்

இந்நிலையில் திருமணத்தின் முதல் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கழுத்தில் தாலியுடன் அமர்ந்திருக்கும் நயன் தாராவுக்கு நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கண்களை மூடி நெகிழ்ந்து காணப்படுகிறார் நயன்தாரா.

தேவதை போல

தேவதை போல

சிவப்பு நிற சேலையில், தேவதைப்போல் நயன்தாரா காணப்பட்டார். முழு கை ஜாக்கேட், தலையில் பச்சை மற்றும் வெள்ளை கல்லால் ஆன நகை ஜொலி ஜொலிக்க, சிவப்பு சேலை கட்டிய தேவதைபோல காணப்பட்டார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

பட்டு வேட்டி சட்டை

பட்டு வேட்டி சட்டை

அதே போல விக்னேஷ் சிவனும் பாரம்பரிய முறைப்படி பட்டு வேட்டி மற்றும் சட்டையுடன் காணப்பட்டார். திருமணத்திற்கான காஸ்டியூம் டிசைனர்கள் முழுக்க மும்பையிலிருந்து வந்திருக்கின்றனர். பாலிவுட் ஜோடி கத்ரீனா கைப் - விக்கி கௌசல் திருமணத்துக்கு டிசைன் செய்த டிசைனர் shaadi squad டீம் நயன் - விக்னேஷ் திருமணத்துக்கும் டிசைன் செய்துள்ளனர்.

கைய கவனிச்சீங்களா ?

கைய கவனிச்சீங்களா ?

கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலிகட்டும் போது நயன்தாரா இந்த தாலியை அப்படியே உற்றுப்பார்க்கிறார். மேலும், நயன்தாரா கையில் வைத்திருக்கும் மருதாணியில் விக்கி நயன்தாராவை குறிக்கும் வகையில்‘WN' என்று எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடியை ரசிகர்கள் மனதார வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X