»   »  தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்

தனுஷை அடுத்து தோழி நயன்தாராவுக்கும் புரமோஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறம் படத்தின் உதவி இயக்குனராக நயன்தாரா செயல்பட்டதாக இயக்குனர் கோபி தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள த்ரில்லர் படம் அறம். இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நயன்தாராவிடம் வேலை வாங்கியது கடினம் இல்லை என்கிறார் கோபி.

நயன்தாரா

நயன்தாரா

அறம் படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றினார். தனது காட்சிகள் முடிந்த உடன் கேரவனுக்குள் சென்று உட்கார மாட்டார். மாறாக செட்டில் தான் இருப்பார் என்கிறார் கோபி.

கோபி

கோபி

நயன்தாரா தனது ஷாட் முடிந்த பிறகு பிற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். தனது அடுத்த காட்சி வரும் வரை செட்டில் தான் இருப்பார் என்று கோபி தெரிவித்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

அறம் படத்தை வெறும் 25 நாட்களில் நடித்துக் கொடுத்தார் நயன்தாரா. இந்த படத்தை நயன்தாரா தனது மேனேஜரின் பெயரில் தயாரிப்பதாக முன்பு கூறப்பட்டது.

வெயில்

வெயில்

மண்டையை பிளக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நடிகர், நடிகைகள் போராட்டக் காட்சிகளில் நடித்தனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார் கோபி. தனுஷ் இயக்குனராகியுள்ள நேரத்தில் அவரின் தோழி நயன்தாரா உதவி இயக்குனராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Gopi said that Nayanthara worked as assistant director of his upcoming movie Aram besides playing the character of a district collector.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil