twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "What the......" இந்த கிளைமேக்ஸைப் பார்த்தா உங்களுக்கும் கோபம் வரும்!

    |

    கிரைம் திரில்லர் எடுப்பது ஒரு கலை.. எல்லோருக்கும் கை கூடி வராது... ஏதாவது ஒரு இடத்தில் உறுத்தினால் கூட போச்சு.. படம் புட்டுக்கும்.

    Nayattu a must watch movie during this lockdown

    எத்தனையோ பேர் கிரைம் நாவல் எழுதினாலும்.. ராஜேஷ் குமார் எழுதுவது போல ஆகாது இல்லையா.. அது மாதிரிதான்.. அப்படி ஒரு தரமான "கிரைம் நாவல்" தான் "நாயட்டு". இந்த லாக்டவுன் காலத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய மலையாளப் படம்.

    Nayattu a must watch movie during this lockdown

    மலையாள சினிமாவில் சமீப காலமாக ஒரு சென்சேஷன் போல உருவெடுத்துள்ள ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள படம்.. மனுஷன், பழம் தின்னு கொட்டை போட்ட மம்முட்டிக்கே செம டஃப் கொடுக்கிறார் தனது நடிப்பால். ஜஸ்ட் வந்து நின்றால் கூட அதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது இவரது ஸ்பெஷாலிட்டியாக இருக்கிறது. மம்முட்டியுடன் நடித்த "ஒன்" (1) படம் பார்த்தவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.

    Nayattu a must watch movie during this lockdown

    மலையாளத்து 90ஸ் கிட்ஸ்களின் செல்ல நாயகன் குஞ்சாக்கோ போபன் இன்னொரு ஹீரோ. கதையின் நாயகியாக நிமிஷா சஜயன் (சமீப காலத்தில் மலையாள சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக இவர் உருவெடுத்து வருகிறார்).

    Nayattu a must watch movie during this lockdown

    கதைன்னு எடுத்தா பெருசா எதுவுமே இல்லைங்க.. 3 போலீஸார்.. ஏஎஸ்ஐ மணியன் (ஜோஜு), கான்ஸ்டபிள் சுனிதா (நிமிஷா), கான்ஸ்டபிள் பிரவீன் மைக்கேல் (போபன்). ஒரு கல்யாணத்துக்குப் போகிறார்கள். போன இடத்தில் மது விருந்து. திரும்பும்போது வாகனத்தை தாங்கள் ஓட்டினால் சரியாக இருக்காது என்று தனது சகோதரி மகனை ஓட்டச் சொல்கிறார் மணியன். வரும் வழியில், விபத்து நடந்து விடுகிறது. பைக் ஒன்றை தட்டி விடுகிறது போலீஸ் ஜீப். பைக்கில் போனவர் இறந்து போகிறார். இறந்து போனவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர். அப்போது அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிரமாக பிரச்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் சிக்கினால், அரசியல் சிக்கலில் மாட்டி நம்மை வெளியே வர முடியாதபடி செய்து விடுவார்களே என்று அச்சமடைகின்றனர்.

    Nayattu a must watch movie during this lockdown

    பேசாமல் தலைமறைவாகி விடலாம் என்று முடிவெடுக்கிறார் மணியன்.. வேறு வழியில்லாமல் அதைக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் சுனிதாவும், மைக்கேலும். அங்கிருந்து ஆரம்பிக்கிறது ஓட்டம்.. வேன், பஸ், லாரி என்று மாறி மாறி ஏறி ஊர் ஊராக கடக்கிறார்கள்.. ஒவ்வொரு ஊராக ஓடுகிறார்கள். போலீஸ் படை துரத்துகிறது. மூணாறு வரை ஓட்டம் தொடர்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது.. 3 பேரும் சிக்கினார்களா.. என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

    கிரிமினல்களுக்கு போலீஸ் தண்ணி காட்டுவதைப் பார்த்திருப்போம்.. ஆனால் அதே டிரீட்மென்ட் போலீஸாருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்.. இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். இதில் கதையை ஒரு ஓரமா எடுத்து வைத்து விடலாம். காரணம், பல படங்களில் நாம் பார்த்த கதைதான்.. புதிதாக எதுவும் இல்லை. ஆனால் இந்த ஓட்டம் இருக்கு பாருங்க.. அதைத்தான் அத்தனை எதார்த்தமாக, இயல்பாக, நாமும் சேர்ந்து பதட்டப்படும்படி, விரக்தியாகும்படி, டென்ஷனாகும்படி கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் மார்ட்டின் பரக்கத்.

    3 மெயின் கேரக்டர்கள் தவிர குட்டிக் குட்டியாக நிறைய கேரக்டர்கள்.. இந்த கிரைம் திரில்லருக்கு மேலும் செறிவூட்டுகின்றனர். குறிப்பாக இந்த மூன்று பேருக்கும் அடைக்கலம் கொடுப்பவராக வரும் தமிழ்க்காரர் மூர்த்தி.. (அந்த தண்ணீர்ப் பஞ்சாயத்து குறித்த வசனம் செம!) ஸ்பெஷல் போலீஸ் ஸ்குவாடுக்குத் தலைமை வகிக்கும் பெண் அதிகாரி அனுராதா (நடிகை யமா).. அந்த போலீஸ் படை என எல்லோருமே கச்சிதமாக வந்து உட்கார்ந்திருக்கிறார்கள் கதையில். எந்த இடத்திலும் ஒரு உறுத்தல் கூட தெரியவில்லை.

    இன்வெஸ்டிகேஷன் லேடியாக நடித்துள்ள யமாவின் நடிப்பு மிரட்டுகிறது. முகத்தில் அத்தனை தெனாவெட்டு.. பாடி லேங்குவேஜில் ஒரு மிரட்டல்.. ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். டென்ஷனைக் குறைக்க சிகரெட்டை ஊதித் தள்ளுவதிலாகட்டும், சரக்கு அடித்தபடி பிளான் செய்வதாகட்டும்.. அத்தனையிலும் இயல்பு மிளிர்கிறது. இவர் டிராமா ஆர்ட்டிஸ்ட், ரைட்டர் என பல முகம் கொண்டவர்.

    Nayattu a must watch movie during this lockdown

    ஒரு கட்டத்தில் 3 பேரையும் போலீஸ் படை கண்டு பிடித்து விடுகிறது. ஆனால் அரசியல் நெருக்கடி காரணமாக, முதல்வரின் நிர்ப்பந்தத்தின் பேரில், டம்மி குற்றவாளிகளை டிஜிபி, பிரஸ் முன்பு டிக்ளேர் செய்து விடுகிறார். ஆனால் நிஜக் குற்றவாளிகளைப் பிடிக்கப் போன இடத்தில ஒரு அசம்பாவிதம் நேரிடுகிறது. அதை டிஜிபிக்கு சொல்கிறார் யமா.. ஆனால் அவரோ, நாங்க ஏற்கனவே 3 பேரை பிடிச்சுட்டதா சொல்லிட்டோம்.. உங்களுக்குத்தான் சிக்கல் இப்போது, ஏதாவது செய்து தப்பிச்சுக்கோங்க என்று சொல்ல.. கடுப்பான யமா.. What the fuck என்று ஆவேசமாக சொல்லும்போது நமக்கும் அதே மாதிரியான ஆத்திர உணர்வு வருவதைத் தவிர்க்க முடியாது..

    தேவையில்லாத இசை கிடையாது.. கேமரா அழகாக கேரளத்து மலைப்புறங்களை கொண்டு வந்து கண் முன்பு நிறுத்தியுள்ளது. தமிழும், தமிழர்களும் இல்லாமல் எந்த மலையாளப் படமும் முடியாது.. அதை இந்தப் படத்திலும் அழகாக இணைத்துக் கோர்த்துள்ளனர். படத்தைப் பார்த்து முடிக்கும்போது சுனிதா, பிரவீனுக்கு ஏற்படும் அதே அயர்ச்சியை, எரிச்சலை, விரக்தியை நாமும் உணருவோம்.. ஒரு நல்ல படத்துக்குக் கிடைத்த வெற்றி இது.

    மலையாளத்தில் பெரும் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்ற படம் இது. சமீப காலத்தில் மலையாளத்தில் வந்த நல்லதொரு கிரைம் திரில்லர். நெட்பிளிக்ஸில் படம் இருக்கிறது. நீங்களும் பாருங்கள்.. என்ஜாய் பண்ணுங்க.

    English summary
    Nayattu, a Malayalam crime thriller is a must watch movie during this lockdown.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X