»   »  2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்

2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நஸ்ரியா நஸீம் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

நேரம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நஸ்ரியா நஸீம். வந்த வேகத்தில் மிகவும் பிரபலமானார். நல்லா நடிக்கத் தெரிந்த பொண்ணு என்று பெயர் வாங்கினார்.

அதே வேகத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

நஸ்ரியா

நஸ்ரியா

திருமணத்திற்கு பிறகு வீட்டில் இருந்த நஸ்ரியாவை மீண்டும் நடிக்க வருமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

அஞ்சலி மேனன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிக்கும் மலையாள படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா. இந்த படத்தில் நஸ்ரியாவுக்கு வலுவான கதாபாத்திரமாம்.

பார்வதி மேனன்

பார்வதி மேனன்

நஸ்ரியா ரீ என்ட்ரி கொடுக்கும் படத்தில் நடிப்புக்கு பெயர் போன பார்வதி மேனனும் உள்ளார். படப்பிடிப்பு வரும் 18ம் தேதி ஊட்டியில் துவங்குகிறது.

ஊட்டி

ஊட்டி

நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஊட்டி, துபாயில் நடைபெறுகிறதாம். இந்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nazriya Nazim is all set to make a comeback to movies, after a gap. She has already joined the much-awaited upcoming Prithviraj-Anjali Menon movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil