»   »  எங்க வீட்டில் நஸ்ரியா தான் பாஸ், நான் இருக்கிற இடமே தெரியாது: பஹத் பாசில்

எங்க வீட்டில் நஸ்ரியா தான் பாஸ், நான் இருக்கிற இடமே தெரியாது: பஹத் பாசில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வீட்டில் நஸ்ரியா தான் பாஸ் என அவரது கணவரும், மலையாள நடிகருமான பஹத் பாசில் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருக்க பஹத் தான் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பஹத் கூறுகையில்,

நஸ்ரியா தான்

நஸ்ரியா தான்

எங்கள் வீட்டில் நஸ்ரியா தான் பாஸ். நான் இல்லை. அவரை படங்களில் நடிக்க விடமால் நான் தடுக்கவில்லை. அவராகத் தான் பிரேக் எடுத்து வீட்டில் உள்ளார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புகிறார்.

திருமணம்

திருமணம்

என்னை எப்படி சமாளிப்பது என்று நஸ்ரியாவுக்கு நன்றாகத் தெரியும். திருமணத்திற்கு பிறகு நான் மிகவும் அமைதியாகிவிட்டேன். திருமண வாழ்க்கையை மிகவும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

வருவார்

வருவார்

நஸ்ரியா நிச்சயம் மீண்டும் படங்களில் நடிக்க வருவார். நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் திரும்பி வருவது பற்றி அவர் வாயால் அறிவிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அவரது நடிப்பு விஷயத்தில் நான் குறுக்கிட மாட்டேன்.

பிசி

பிசி

வீட்டில் சும்மா இருக்க பிடிக்காத நஸ்ரியா தனது தோழியும், நடிகர் துல்கர் சல்மானின் மனைவியுமான அமல் சுபியாவுடன் சேர்ந்து கேரளாவில் தாங்கள் வாங்கியுள்ள புது வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.

English summary
Fahad Faasil said that he is not a dominating husband but a good friend to his wife Nazriya. According to Fahadh, Nazriya is the dominating partner in their relationship.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil