twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் மோசடி-இசையமைப்பாளர் சுந்தருக்கு பிடிவாரண்ட்

    By Staff
    |

    பிரபல இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவுக்கு நெல்லை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    சித்திரம் பேசுதடி, நாடோடிகள், அஞ்சாதே உள்ளிட்ட பல சினிமா படங்களுக்கு இசையமைத்தவர் சுந்தர்.சி. இவர் மீது பாளையங்கோட்டையைச் சேர்ந்த மரிய துரைராஜ் என்பவர் நெல்லை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    நானும், சென்னையைச் சேர்ந்த சி.சுந்தர் என்ற சுந்தர்.சி பாபுவும் நீண்ட காலமாக நண்பர்கள் கடந்த 2008 ம் ஆண்டில் சுந்தர் சி.பாபு என்னிடம் ரூ. 20 லட்சம் கைமாற்றாக கடன் வாங்கினார். அதை 2009 மே மாதம் தருவதாக உறுதி அளித்தார்.

    ஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது ரூ. 7 லட்சத்து 31 ஆயிரத்து 11 மதிப்பிலான வங்கி காசோலையை (செக்) என்னிடம் கொடுத்தார். அந்த செக்கை நான் வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்பி வந்தது.

    இந்த பணத்திற்கு எந்தவித பதிலும் வர வில்லை. வக்கீல் நோட்டீசு அனுப்பிய பிறகும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே நான் கொடுத்த ரூ. 20 லட்சத்தை திருப்பி தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நெல்லை முதல் வகுப்பு மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் 5 தடவை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஒரு முறை கூட சுந்தர் சி. பாபு நேரில் ஆஜராகவில்லை.

    இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டார். இந்த வழக்கு அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X