தனுஷ் அக்கா மகனா இது.. ஆளே மாறிட்டாரே.. அடுத்த படத்துக்கு ரெடி.. அடேங்கப்பா ஹீரோயின் அந்த பிரபலமா?

சென்னை: க்ளீன் ஷேவ் செய்து அப்படியே மாமா தனுஷ் போல நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான தனுஷின் அக்கா மகன் பவிஷ் தனது அடுத்த படத்தின் பூஜையை இன்று போட்ட்டுள்ளார். அவரது அடுத்த படம் குறித்தும் அவருக்கு ஹீரோயினாக மாறியுள்ள பிரபலம் குறித்தும் இங்கே பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் ஹீரோவாக பரபரப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல இயக்குநராகவும் தரமான படங்களை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு ராயன் படத்தை இயக்கி நடித்த தனுஷ் இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கா மகன் பவிஷை ஹீரோவாக்க முடிவு செய்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார்.

NEEK Actor Pavish s New Movie Pooja happened today
Photo Credit:

ஆனால், தனுஷ் இயக்கிய நிலையிலும், அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடவில்லை. இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தெலுங்கில் கல்லா கட்டிய நிலையில், தமிழில் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக இந்த மாத தொடக்கத்தில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான இட்லி கடை படமும் சுமார் 70 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜென் ஸி காதல் கதையாக டியூட் படத்துக்கு முன்னோடியாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியானது. ஆனால், அந்த படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் மட்டுமே மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தை ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் இந்த படம் நல்லா தானே என இருக்கு என வழக்கம் போல லேட்டாக பாராட்டினார்கள்.

பவிஷ் அறிமுகம்: கஸ்தூரி ராஜா, செல்வராகவன், தனுஷ் என குடும்பத்தில் பலரும் சினிமாவில் இருந்து வரும் நிலையில், தனுஷின் மகன்களான லிங்கா மற்றும் யாத்ராவுக்கு முன்பாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். அதுவும் தனது மாமா தனுஷ் இயக்கத்திலேயே அவர் நடித்த படம் இந்த ஆண்டு வெளியானது. அந்த படத்தில் பவிஷின் நடிப்பை பார்த்த பலரும் அப்படியே குட்டி தனுஷ் என்றே கூற ஆரம்பித்தனர்.

அடுத்த படம்: ரவி மோகன் நடிப்பில் வெளியான போகன் படத்தை இயக்கிய லக்‌ஷ்மணின் உதவி இயக்குநரான மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டு கிராமத்து இளைஞர் போல பவிஷ் மாறியுள்ளார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு இன்ஸ்டாகிராம் பிரபலம் நாகா துர்கா பவிஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த படம் பவிஷுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X