twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா, அம்மாவால் கார், நகை, வீடு கொடுக்க முடியும், கேட்கிறேன்: நீயா நானாவில் பெண் அதிரடி

    By Siva
    |

    சென்னை: பெற்றோரால் கொடுக்க முடியும் என்பதால் கார், வீடு, நகைகள் கேட்கிறோம் என பெண்கள் நீயா நானா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

    கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட பெண்கள் திருமணத்திற்கு தங்கள் பெற்றோரிடம் இருந்து 50 பவுன் நகை, வீடு, கார், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்து இறங்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்.

    இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதை நீங்களே படித்துப் பாருங்க.

    பெண்

    பெண்

    100 ஆண்டுகளாக ஆண்கள் வரதட்சணை என்ற பெயரில் கார், பைக், வீடு, சொம்பு, பாத்திரம் வேண்டும் என்று ஒரு பெண்ணின் பெற்றோரின் ரத்தத்தை குடிக்கும்போது பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கேட்பது தவறா என்றார் ஒரு பெண்.

    கீழ்த்தரம்

    கீழ்த்தரம்

    பெண்கள் தங்கள் பெற்றோரிடம் நகை, பணம் கேட்பது தவறு இல்லை. ஒரு மணிநேர நிகழ்ச்சியில் ஒரு பெண் கேட்டால் ஏன் இவ்வளவு வக்கிரத்தை கொட்டுறீங்க. 5 சவரன் நகை போட முடியாமல் என் தமிழ்நாட்டு பெண்கள் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள்.

    வரதட்சணை

    வரதட்சணை

    ஆண்கள் வரதட்சணை வாங்குவது தான் மேஜர். முதலில் அதை சரி பண்ணுங்க அதைவிட்டு எதுக்கு பெண்கள் மீது குதிக்கிறீங்க? முதலில் உங்க வீட்டை சுத்தம் செய்ங்க.

    பைக் ஷோ

    பைக் ஷோ

    நீயா நானாவில் ஃபேன்சி பைக் வாங்குவது குறித்து நடந்த ஷோ பற்றி யாருமே குதிக்கவில்லை. ஆனால் பெண்கள் கேட்டால் மட்டும் ஆளாளுக்கு குதிக்கிறாங்க என்றார் மற்றொரு பெண்.

    மீம்ஸ் கிரியேட்டர்

    மீம்ஸ் கிரியேட்டர்

    பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கேட்பது குறித்து தேவையில்லாமல் மீம்ஸ் போடுகிறீர்கள் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் மீது குற்றம்சாட்டினர் பெண்கள்.

    முடியும்

    முடியும்

    எங்க அப்பா, அம்மாவால முடியும் அதனால் அவர்களிடம் கேட்கிறேன். பெண்கள் எல்லாத்தையும் யோசிச்சு தான் கேட்போம். ஹய், நான் மீம்ஸில் வந்துட்டேனா என்று ஜாலியாக எடுத்துக்கிற பொண்ணு தான். ஆனால் போகப் போக ஆளாளுக்கு என்னை கேள்வி கேட்டானுங்க.

    English summary
    Neeya Naana programme telecasted on sunday has again caught the attention of many as some girls defend their stand of asking car, house, jewels from parents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X