»   »  முறுக்கு மீசை... முரட்டு பார்வை திருநாளில் அசத்தும் நீயா நானா கோபிநாத்

முறுக்கு மீசை... முரட்டு பார்வை திருநாளில் அசத்தும் நீயா நானா கோபிநாத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போலீஸ் என்றாலே முறுக்கு மீசை வைத்திருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி போல. என்கவுண்டரில் நாலு பேரை சுட்டால்தான் வீரமான போலீஸ் என்று ஒத்துக்கொள்கிறார்கள். இந்த விதியை பின்பற்றி ஜீவாவின் திருநாள் திரைப்படத்தில் டிஎஸ்பி புகழேந்தி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் நீயா நானா கோபிநாத்.

சினிமா என செட் ஆகுமா தெரியலையே என்று கூறி வந்த கோபிநாத், சமுத்திரகனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதுவும் தொலைக்காட்சி நெறியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் எளிதான கதாபாத்திரம்தான் அதனால் அதிகம் மெனக்கெடவில்லை.


NEEYA NAANA Gopinath is acting DSP role in Tirunaal

தற்போது திருநாள் படத்தில் போலீஸ் வேடம் கோபிநாத்திற்கு கிடைத்துள்ளது. முறுக்கு மீசை... முரட்டுப்பார்வை.... ரவுடிகளை போட்டுத்தள்ளும் டிஎஸ்பி கதாபாத்திரம். டிரைலரில் அசத்தலாய் காட்டியுள்ளனர். தஞ்சாவூர், கும்பாகோணம் பகுதிகளில் மிரட்டும் ரவுடிகளை என்கவுண்டரில் போடும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கோபிநாத்.


திருநாள் படத்தில் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்கு சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றிக்கான வாசலை திறக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் கோபிநாத்.


நடிகர் ஜீவா இப்போது முழுக்க முழுக்க, கிராமத்து பின்னணியில் மிரட்டியிருக்கும் படம் 'திருநாள்' இதில் ஜீவாக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

English summary
Vijay TV NEEYA NAANA Anchor Gopinath is acting DSP role in Tirunaal Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil