twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உண்மையாக காதலியுங்கள் எங்களுக்கும் காதல் வரும்...ஒரு ட்ரான்ஸ்ஜெண்டர் கதை சொல்லும் "நேஹா" குறும்படம்

    |

    சென்னை: வித்தியாசமான குறும்படங்கள் வித்தியாசமான சிந்தனையுடன் பல இயக்குனர்கள் தொடர்ந்து இயக்கி வருகிறார்கள்.

    Recommended Video

    Neha Shortfilm Team | இந்த குறும்படம் நிறைய Award வாங்கும் | Filmibeat Tamil

    அந்த வகையில் "நேஹா" என்னும் ஒரு புதிய குறும்படம் மீடியா வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ட்ரான்ஸ்ஜெண்டர் என்கின்ற இந்த சமூகத்திற்கு பலவிதமான சிந்தனைகளுடன் பல படங்கள் வந்துள்ளது.

    இந்தப் படம் ஒரு ஆழமான மன நிலையை, குறிப்பாக காதலை பிரதிபலிக்கும் டிரான்ஸ் உணர்வுகளை சொல்லும் ஒரு குறும்படம் ஆகும்.

    அதென்ன வனிதாவிற்கு மட்டும்...பிக்பாசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் அதென்ன வனிதாவிற்கு மட்டும்...பிக்பாசை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

    மரியாதையும் அங்கீகாரமும்

    மரியாதையும் அங்கீகாரமும்

    மூன்றாம் பாலினம், அரவாணிகள் , திருநங்கைகள் என்று பல விதமான புனைப் பெயர்களுடன் சமூகத்தில் இவர்களுக்கு என்று ஒரு முத்திரை கொடுக்கப்பட்டு வருகிறது. சமூகத்தின் பல துறைகளில் சாதனை படைத்து வரும் இவர்கள் மற்றொரு பக்கம், இன்னமும் மரியாதையும் அங்கீகாரமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இருப்பினும் பல தெருக்கூத்து நிகழ்ச்சிகளிலும் வீதி நாடகங்களிலும் இவர்களைப் பற்றிய பல விழிப்புணர்வு அறிவிப்புகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது.

    மாற்றத்தை ஏற்படுத்தும்

    மாற்றத்தை ஏற்படுத்தும்

    இவர்களது உணர்வுகளை புரிந்து கொள்வது சமூகத்திலும் இல்லை,அவர்கள் வாழ்கின்ற சொந்த வீட்டிலும் இல்லை என்பதினால் பல இன்னல்களுக்கு ஆளாகும் இவர்களை யாராவது ஒரு தனிநபர் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால், காதலித்தால், உண்மையான அன்பையும் காதலையும் வெளிப்படுத்தினால் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த "நேஹா" குறும்படம் வலியுறுத்துகிறது.

    உருகி உருகி சொன்ன காதல்

    உருகி உருகி சொன்ன காதல்

    இந்த படத்தில் நிவாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார் . நேஹா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களது உண்மையான பெயர் தான் படத்தின் கதாபாத்திரங்களின் பெயருமாக இருக்கிறது. நேஹா ஒரு திருநங்கையாக வாழ்வது மட்டுமல்லாமல் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்கு புரிந்து கொண்டு பலவிதமான உணர்ச்சிகளை காட்சிகளின் மூலம் மிகவும் அற்புதமாக பிரதிபலிக்கிறார். ட்ரான்ஸ்ஜெண்டர் பலரும் இந்த படத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.ஒரு ஆண் சமூகத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படி ஒரு காதலை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்கும்? டிரான்ஸ மனநிலை எவ்வளவு சந்தோஷப்படும், அவர்களுக்கும் அவர்களது உணர்வுகளுக்கும் காதலை உருகி உருகி வெளிப்படுத்தினால் அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து ஒரு புதிய அத்தியாயத்தை படைக்க, உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதை புரியவைத்த குறும்படம் இந்த நேஹா.

    காதலர் தினம்

    காதலர் தினம்

    ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் காதலர் தினம் வருகிறது...இந்த ஆண்டு காதலை,அன்பை டிரான்ஸ சமூகத்திடம் வெளிப்படுத்தவேண்டும் . அவர்களை ஏற்று கொள்ள வேண்டும். பசி, அழுகை, வலி, போன்ற பல உணர்வுகள் எல்லா மனிதனுக்கும் இருப்பது போல இவர்களுக்கும் உருவானதுதான், பொதுவானதுதான். அவர்களது உணர்வுகளை மனதிலிருக்கும் ஏக்கங்களை, சமூகம் இவர்களை தாக்கும் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றி அன்பை வெளிப்படுத்தினால் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்காலம் சந்திக்கும் என்பதை "நேஹா" படத்தின் இயக்குனர் பிரவீன் சந்திரன் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு காட்சிகளாக சொல்லி உள்ளார்.

    ஓ.டி. டி அல்லது யூடியூப் மூலமாக

    ஓ.டி. டி அல்லது யூடியூப் மூலமாக

    இந்தப் படத்தில் நடித்த நேஹா ஒரு காட்சியில் மிகவும் உணர்வுப்பூர்வமான வசனத்தை கேள்விகளாக எழுப்பி தன் நண்பனிடம் பகிர்ந்து கொள்வார். அந்தக் கேள்விகள் சமுதாயத்தை பார்த்து கேட்கும் கேள்விகள். விடையை சொல்வதும் இந்த கேள்விகளுக்கு பதிலாக மாறுவதும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனுடைய கடமையாகும். விரைவில் இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட இருக்கிறது. அதன்பின் இயக்குனர் பிரவீன் இந்த படத்தை பொதுமக்கள் பார்வைக்கு ஓ.டி. டி அல்லது யூடியூப் மூலமாக வெளிக்கொண்டு வருவார் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் திரையிடல் சமீபத்தில் சென்னையில் நடந்தது. டிரான்ஸ் கம்யூனிட்டியை சேர்ந்த பலரும் வந்திருந்தனர். குறிப்பாக காவல்துறையில் சாதித்த சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா மிகவும் ஆதரவாக பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா டிரான்ஸ் பெண்ணாக இருந்து வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்றார் என்பது ஒரு தனி கதை. தன்னுடைய தோழிகளுக்கும் முன்னுக்கு வரும் பல டிரான்ஸ் அமைப்புக்கும் இவர் உதவி செய்து வருகிறார்.

    ஜெயச்சந்திரன், பிரவீன்சந்திரன்

    நேஹா படத்தின் இயக்குனர் பிரவீன் சந்திரன் டிவி புகழ் ஜெயச்சந்திரன்யுடைய தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. பல காமெடி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் அசத்தி வரும் ஜெயச்சந்திரன்- தனது தம்பியின் இந்த குறும்பட முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.பல கமர்சியல் படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகள் இப்படிப்பட்ட மாற்று சிந்தனையுடன் சில நல்ல குறும்படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. வித்தியாசமான படைப்புகளும் படைப்பாளிகளும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. நல்ல படங்களை மக்கள் என்றுமே கைவிடுவதில்லை . நேஹா என்னும் இந்த குறும்படத்தை உருவாக்கிய ஒட்டு மொத்த குழுவுக்கும் அதன் இயக்குனர் பிரவீன்சந்திரன் எடுத்த முயற்சிக்கும் விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம்.

    English summary
    Neha Short Film Revealing the Real Love From Transgenders
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X