ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இந்த இயக்குநர் இயக்குகிறாரா?.. சுந்தர். சிக்கு ஜாக்பாட்!
சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து படம் பண்ணப் போவதை உறுதி செய்துவிட்டனர். சமீபத்தில், நடைபெற்ற விழாவில் கூட ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் கமல்ஹாசனின் ராஜ்கமல் பேனரில் அப்பா படம் பண்ணப் போகிறார் என்பதை அறிவித்து விட்டார்.
கூலி படம் சொதப்பிய நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு லோகேஷ் சொன்ன கதையும் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம்.

இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சனுக்கு கிடைத்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிக்கு கதை பிடிச்சு போச்சு: ஜெயிலர் படத்தின் மூலம் தான் சூப்பர் ஸ்டாருக்கு மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை சாத்தியமாக்கி கொடுத்தார் நெல்சன். தர்பார், அண்ணாத்த என தொடர் தோல்விகளில் இருந்து ரஜினிகாந்த் மீண்ட நிலையில், ஜெயிலர் 2 படத்தையும் நெல்சன் தாறுமாறாக உருவாக்கி வருவதை ரஜினிகாந்த் பார்த்து சந்தோஷப்பட்டது மட்டுமின்றி, தானும் தனது நண்பர் கமலும் இணைந்து நடிக்கக் கூடிய படத்துக்கு உன்கிட்ட ஏதாவது கதை இருக்காப்பா எனக் கேட்க, அடுத்த நாளே நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கமலுக்கும் ஓகே: கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவே விருப்பமாக இருந்தார். ஆனால், ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றதும் அந்த எண்ணத்தை விட்டு விட்டார். இப்போ நெல்சன் சொன்ன கதை அவருக்கும் பிடித்துப் போக இந்த கதையையே பண்ணலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்கின்றனர். ஆனால், ரஜினிகாந்த் - கமல் படம் உருவாவதற்கு முன்பாக ரஜினிகாந்தின் இன்னொரு படம் ரெடியாகி விடும் என்கின்றனர்.
சுந்தர். சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்: அருணாச்சலம் படத்தை இயக்கி சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர் சுந்தர். சி. கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் படத்தையும் அவர் இயக்கினார். மூக்குத்தி அம்மன் 2 படத்தை விரைவில் முடிக்கவுள்ள சுந்தர். சி அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து பக்கா காமெடி ஜானர் படம் ஒன்றை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கொடுக்கவுள்ளார் என்கின்றனர். அந்த படத்தை முடித்து விட்டுத்தான் நெல்சன் இயக்கத்தில் ரஜினி - கமல் நடிப்பார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











