»   »  நெஞ்சில் துணிவிருந்தால்... ஜோடியா போய் பார்த்தா ஒரு பவுனு தங்கமாம்!

நெஞ்சில் துணிவிருந்தால்... ஜோடியா போய் பார்த்தா ஒரு பவுனு தங்கமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வித்தியாசமான கெட்டப்பில் சன்னி லியோன்-புகைப்படம்- வீடியோ

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தைப் பார்ப்பவர்களுக்கு பரிசு அறிவித்துள்ளார்கள்.

இந்தப் படத்தைப் பார்க்கும் பத்து காதல் ஜோடிகளுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப் போவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

Nenjil Thunivirunthal new promotion

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரின், ஷாதிகா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது.

இந்தப் படத்துக்கு சாதகமான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

படத்தைப் பார்க்கும் காதல் ஜோடி, தங்கள் டிக்கெட்டை கவுன்ட்டரில் கொடுத்துவிட்டு, அங்குள்ள வீடியோ குழுவிடம் தங்கள் காதல் அனுபவங்களைக் கூற வேண்டும். அது வீடியோவாகப் பதிவு செய்யப்படும்.

இந்த வீடியோக்களைப் பரிசீலித்து சிறந்த காதல் ஜோடிகளுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மொத்தம் பத்து ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். திருமண வயது வரம்பு உள்ளவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். எனவே வயது ஆதாரத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என்றும் அறிவித்துள்ளனர்.

English summary
Nenjil Thunivirunthal team has announced gold prize for 10 pairs of lovers for watching the movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil