Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நெஞ்சுக்கு நீதி டிரைலர் வரவேயில்லையே...மறுபடியும் ஏமாற்றிய போனி கபூர்
சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி வரை காத்திருக்க வைத்து, இந்த முறையும் ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் போனி கபூர்.
தமிழில் அரசில், போலீஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம். ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
அந்த வசனத்தை பார்த்து அப்செட் ஆன உதயநிதி ஸ்டாலின்.. மேடையில் மன்னிப்புக் கேட்ட சிவகார்த்திகேயன்!

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்
இந்தியில் 2019 ம் ஆண்டு ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரும், உதயநிதியின் தாத்தாவுமான மு.கருணாநிதி எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தின் டைட்டிலேயே உதயநிதி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரைலர், பாடல் ரிலீஸ்
2021 ம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த படம் 2022 ம்ஆண்டு மே 20 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை 6.30 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கிளிம்ப்ஸ் வெளியிட்ட போனி கபூர்
இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருந்தனர். சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட நெஞ்சுக்கு நீதி டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், டிரைலரும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டி இருந்தது.

இப்படி ஏமாற்றி விட்டாரே
ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் வெளியாகாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கடுப்பான ரசிகர்கள், போனி கபூருக்கு இதுவே வேலையாக போய் விட்டது. வலிமை படத்திற்கு தான் இப்படி செய்தார் என்றால் எல்லா படத்திற்கும் இப்படியே செய்கிறாரே. அஜித் பிறந்தநாளுக்கு ஏகே 61 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்க வைத்து ஏமாற்றினார். தற்போது நெஞ்சுக்கு நீதி டிரைலர் வரும் என அறிவித்து விட்டு இப்படி ஏமாற்றி விட்டாரே என புலம்பி வருகின்றனர்.

அட போங்கப்பா...கடுப்பான ரசிகர்கள்
அதே சமயம் நெஞ்சுக்கு நீதி டிரைலர், பிரைவேட்டாக வெளியிடப்பட்டதால் தான் ரசிகர்களுக்கு டிரைலர் லிங்க் ஓப்பன் ஆகவில்லை என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது வெளியிட போகிறார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.