twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட்டில் நெபோட்டிசம் என்பது அபத்தமான குற்றச்சாட்டு.. வரிந்து கட்டிய நடிகை வனிதா!

    |

    சென்னை: பாலிவுட்டில் நெபோட்டிசம் என்பது அபத்தமான குற்றச்சாட்டு என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Vanitha கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது? மறுப்பு தெரிவித்த NanjilVijayan

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு நெபோட்டிசம் என்ற வார்த்தை பரிட்சயமான வார்த்தையாக மாறிவிட்டது.

    பாலிவுட்டில் இருந்த நெபோட்டிசமே சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    என்ன லிஸ்ட் பெருசா போகுது.. சுஷாந்த் சிங்கும் சாராவும் அப்படி காதலிச்சாங்க.. போட்டுடைத்த நண்பன்!என்ன லிஸ்ட் பெருசா போகுது.. சுஷாந்த் சிங்கும் சாராவும் அப்படி காதலிச்சாங்க.. போட்டுடைத்த நண்பன்!

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    சினிமா பிரபலங்கள் பலரும் இந்தி சினிமாவில் நெபோடிசம் இருப்பதாக குற்றம்சாட்டினர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட பலரும் மற்ற மொழிக்காரர்களுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அபத்தமான குற்றம்

    அபத்தமான குற்றம்

    இந்நிலையில் நடிகை வனிதா விஜயக்குமார் பாலிவுட்டில் உள்ள நெபோட்டிசம் குறித்தும் சைபர் புல்லிங் குறித்து தனது டிவிட்டர் பக்கதில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.#nepotisminbollywood என்பது மிகவும் அபத்தமான குற்றம் சொல்லும் விளையாட்டு..

    கவனத்தை பெறுவதற்கு..

    கவனத்தை பெறுவதற்கு..

    மற்ற பிரபலங்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதன் மூலம் கவனத்தைத் தேடுவது தீவிரமாகிவிட்டது. திறமையானவர்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. சைபர் புல்லிங் என்பது மற்றொரு நிலைக்குச் செல்கிறது என கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    மேலும் மற்றொரு பதிவில் சைபர் புல்லிங் குறித்து பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளார் நடிகை வனிதா. அதில், சைபர் புல்லிங்கை இந்தியாவில் முன்னுரிமையான குற்றமாக மாற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சரிபார்த்த பிறகு சமூக ஊடக கையாளுதல்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

    கடுமையான தண்டனைகள்

    கடுமையான தண்டனைகள்

    சோஷியல் மீடியா கணக்குகள் வங்கிக் கணக்குகளைப் போன்று ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இணைய சட்டங்களை மீறினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மக்கள் பைத்தியம் பிடித்திருக்கிறார்கள்.. அதிகளவு நெகட்டிவிட்டி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    ஊருக்கு உபதேசமா?

    ஊருக்கு உபதேசமா?

    வனிதாவின் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள், வனிதா அக்கா ஆன் ஃபயர் என்றும், ஊருக்கு மட்டும்தான் உபதேசமா என்றும் கேட்டு விளாசியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், ரேஷன் கார்டு, டிகிரி சர்டிஃபிகேட், பிறப்பு சான்றிதழ் மற்றும் விசிட்டிங் கார்டுகளை கூட இணைத்து விடலாம் என நக்கல் அடித்துள்ளனர்.

    English summary
    Actress Vanitha vijayakumar urges PM Modi, to make cyberbullying a prioritized crime in India. She has tagged PM Twitter handle also.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X