For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மொக்கை ஜோக் டு ராஜலட்சுமி பஞ்சாயத்து.. இந்த ஆண்டு அறிமுகமான அதிதி ஷங்கரை சுற்றிய சர்ச்சைகள்!

  |

  சென்னை: இயக்குநர் ஷங்கரின் 2வது மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து பட்டம் எல்லாம் வாங்கிய நிலையில், தமிழ் சினிமாவில் அதிரடியாக ஹீரோயினாக இந்த ஆண்டு களமிறங்கினார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படம் மூலம் டைரக்ட்டா ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த ஷங்கரின் மகளை சுற்றி இந்த ஆண்டு ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவின.

  வாரிசு நடிகைகளுக்கு எடுத்த உடனே பெரிய படம் கிடைக்கிறது என பிரபல நடிகை ஒருவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

  அதே போல பாடகி ராஜலட்சுமி செந்தில் பாடிய பாட்டை நீக்கி விட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் அதிதி சங்கர் பாடிய பாடல் படத்தில் அரங்கேறியதும் சர்ச்சைகளை கிளப்பின.

  ராம் சரணின் RC15 படப்பிடிப்பு முடிந்தது..நியூஸிலாந்து ஷெட்யூலை முடித்த ஷங்கர்!ராம் சரணின் RC15 படப்பிடிப்பு முடிந்தது..நியூஸிலாந்து ஷெட்யூலை முடித்த ஷங்கர்!

  ஷங்கர் மகள்

  ஷங்கர் மகள்

  இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்தியன், முதல்வன், சிவாஜி, எந்திரன், 2.0 என பல பிரம்மாண்ட படங்களை கொடுத்த இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கார்த்தியின் விருமன் படத்தில் தேன் எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அப்பாவின் பெயரை காப்பாற்றிவிட்டார் என பாராட்டுக்களை அள்ளினார்.

  டாக்டர்

  டாக்டர்

  தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் மருத்துவம் படித்து விட்டு டாக்டராக மாறாமல் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். சாய் பல்லவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி வரிசையில் இன்னொரு டாக்டர் நடிகையாக அதிதி ஷங்கர் கோலிவுட்டில் அசத்தி வருகிறார். கொஞ்ச வருடங்களுக்கு பிறகு செட் ஆகவில்லை என்றால் ஸ்டெத்தஸ்கோப் மாட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று விடுவார்கள் என்றும் ட்ரோல்களும் இதுபோன்ற நடிகைகள் மீது அதிகம் பறக்கின்றன.

  ஆத்மிகா ட்வீட்

  ஆத்மிகா ட்வீட்

  விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் அடுத்து உடனடியாக சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்ற நிலையில், நடிகை ஆத்மிகா அதிரடியாக போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கோலிவுட்டிலும் நெபோடிசம் எனும் வாரிசு அரசியல் சர்ச்சையை ஆரம்பித்து விட்டார் அதிதி ஷங்கர் என பற்ற வைத்து இருந்தார் ஆத்மிகா.

  ராஜலட்சுமி பாட்டுக்கு வேட்டு

  ராஜலட்சுமி பாட்டுக்கு வேட்டு

  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ராஜலட்சுமியும் அவரது கணவர் செந்திலும் சினிமாவில் பாடகர்களாக மாறி பல பாடல்களை பாடி வருகின்றனர். "சின்ன மச்சான்", புஷ்பா "சாமி" பாடல் என பெரிய படங்களில் பாடி வரும் ராஜலட்சுமி குரலில் விருமன் படத்தில் உருவான மதுரை வீரன் பாடலை கடைசி நேரத்தில் நீக்கிவிட்டு யுவன் சங்கர் ராஜா அதிதி ஷங்கரை அந்த பாடலை பாட வைத்திருந்தது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது.

  அதிதியை திட்ட வேண்டாம்

  அதிதியை திட்ட வேண்டாம்

  ஆனால், அதில், தனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை பல பாடல்கள் இதுபோல கடைசி நேரத்தில் பாடலுக்கு ஏற்ற குரலுக்காக இசையமைப்பாளர்கள் மாற்றி உள்ளனர். அதிதியை யாரும் திட்ட வேண்டாம் எனக் ராஜலட்சுமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஆனாலும், ரசிகர்கள் அதிதி ஷங்கர் ராஜலட்சுமியின் வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார் என்றாலே ட்ரோல் செய்தனர்.

  மொக்கை ஜோக் பரிதாபங்கள்

  மொக்கை ஜோக் பரிதாபங்கள்

  இந்த சர்ச்சைகளை கூட பொறுத்துக் கொண்ட ரசிகர்கள் அதிதி ஷங்கர் செல்லும் இடத்தில் எல்லாம் அடிக்கும் மொக்கை ஜோக்குகளை பார்த்து அவரை க்ரிஞ்ச் ஹீரோயின் என்றே கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த ஆண்டு விருமன் படத்தில் அசத்திய அதிதி ஷங்கர் நடிப்பில் அடுத்த ஆண்டு மாவீரன் படம் வருகிறது. ஹீரோக்களை போல என்ன வருஷத்துக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறார். இந்நேரம் 5, 6 படங்களில் கமிட் ஆகியிருக்கலாமே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  English summary
  Nepotism to Singer Rajalakshmi song issue Actress Aditi Shankar faces several controversies in 2022. Director Shankar daughter Aditi Shankar debuts this year in Kollywood with Karthi's Viruman and her next movie with Sivakarthikeyan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X