»   »  நேர் எதிர் லாபத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ஒரு பாதி... கலைப்புலி தாணு

நேர் எதிர் லாபத்தில் நலிந்த கலைஞர்களுக்கு ஒரு பாதி... கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் தயாரித்துள்ள நேர் எதிர் படத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப் போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

ரிச்சர்ட், பார்த்தி, ஜஸ்வர்யா இணைந்து நடித்துள்ள படம் 'நேர் எதிர்'. பிரதீப் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பி.வாசு தலைமை வகித்தார்.

ner ethir

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் டிரெய்லரை வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் விழாவில் பேசும்போது, "நேர் எதிர்' அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இந்த படத்துக்கு பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளது. இதன் டிரெய்லரே சீட் நுனிக்கு இழுக்கிறது. நான் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன். கதை தயாராகி விட்டது. விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம். ஆனால் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

நான் இயக்கிய 'துப்பாக்கி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. அவர் படத்துக்கு வந்த எல்லா பிரச்சினைகளையும் அம்மா மாதிரி தாங்கிக் கொண்டார். சினிமாவில் இப்போது நன்றி உணர்வு, நல்ல நட்பு குறைந்துவிட்டன," என்றார்.

கலைப்புலி தாணு வரவேற்று பேசும்போது, 'நேர் எதிர் படம் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவப் போகிறேன்,' என்றார்.


English summary
Producer Thanu says that he would distribute a share from the profit of Ner Ethir movie to poor producers.
Please Wait while comments are loading...