twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவம் வடிவேலு.. சும்மா இருந்தவரை வம்பில் சிக்க வைத்து.. சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்த ‘நேசமணி’!

    நேசமணி பேட்டியால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் வடிவேலு.

    |

    Recommended Video

    Actor Vadivelu interview: வடிவேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்கள்- வீடியோ

    சென்னை: 'நான் பாட்டுக்கு செவனேனு தானடா இருந்தேன்... என்னை ஏன்டா இதுல கோர்த்து விட்டீங்க?' என ஒரு படத்தில் வடிவேலு டயலாக் பேசுவார். தற்போது ஏறக்குறைய நிஜத்திலும் அவருடைய மைண்ட்வாய்ஸ் அப்படித்தான் இருக்கும். அந்தளவிற்கு அவரது பேட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

    பிரம்மாண்டத்திற்குப் பேர் போன இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்த படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. அதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு இப்படம் மூலம் தான் கதையின் நாயகனாக உயர்ந்தார்.

    வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் சிம்புதேவன் முயற்சித்தார். அப்படத்தையும் ஷங்கரே தயாரிப்பது என முடிவானது.

    கருத்துவேறுபாடு:

    கருத்துவேறுபாடு:

    ஆனால், பட வேலைகள் ஆரம்பித்த சில நாட்களிலேயே சிம்புதேவன், ஷங்கர் மற்றும் வடிவேலுவுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் படத்தில் மேற்கொண்டு நடிக்க வடிவேலு மறுத்தார். இந்தப் பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது.

    பேய் மாமா:

    பேய் மாமா:

    ஷங்கரின் இந்தப் படத்தை முடித்துக் கொடுக்காமல் வடிவேலு வேறு படங்கள் எதிலும் நடிக்கக் கூடாது என ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால் புதிய படங்கள் எதிலும் வடிவேலு நடிக்க முடியாமல் இருக்கிறார். அவரது பேய் மாமா பட வேலைகளும் பாதியில் நிற்கின்றன.

    நேசமணி விவகாரம்:

    நேசமணி விவகாரம்:

    இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென #prayfornesamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது. ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்திருந்த நேசமணி கதாபாத்திரம் அனைவரின் பேசு பொருள் ஆனது. இதனால் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வடிவேலு வந்தார்.

    வடிவேலு பேட்டி:

    வடிவேலு பேட்டி:

    இந்த விவகாரத்தில் அவரது கருத்தை அறிந்து கொள்ள ஊடகங்கள் முயற்சித்தன. அப்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு வடிவேலு பேட்டியளித்தார். அதில், நேசமணி விவகாரத்தோடு, இம்சை அரசன் பிரச்சினை பற்றியும் அவர் பேசினார். அந்தப் பேட்டியில் இயக்குநர் சிம்புதேவனை அவர், ‘அவன் இவன்' என ஒருமையில் பேசியிருந்தார்.

    இயக்குநர்கள் கண்டனம்:

    இயக்குநர்கள் கண்டனம்:

    இதனால் அவர் சர்ச்சையில் சிக்கினார். வடிவேலுவின் இந்தப் பேச்சை பலரும் விமர்சனம் செய்தனர். ஏற்கனவே, மூடர்கூடம் நவீன் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது இயக்குநர் சுசீந்திரனும் வடிவேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் வடிவேலுவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

    "அதெப்படி ஒரு இயக்குநரை அவன் இவன் என்று ஒருமையில் பேசலாம்".. வடிவேலுவை வன்மையாக கண்டித்த சுசீந்திரன்

    பாவம் வடிவேலு:

    பாவம் வடிவேலு:

    இப்போது திரும்பவும் இச்செய்தியின் முதல் பாராவைப் படித்துப் பாருங்கள். வடிவேலுவின் மனநிலை என்ன என்பது உங்களுக்கும் புரியும். பிரண்ட்ஸ் படத்தில் அல்ல, இப்போது தான் நிஜமாகவே வலுவேலுவின் தலையில் சுத்தியலால் நச்சென அடித்து விட்டார் நேசமணி. #prayforvadivelu.

    English summary
    A interview of actor Vadivelu about director Simbudevan has created problem for him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X