தி கிரே மேன் 2 ரெடியாகுதாம்.. இன்னொரு ஸ்பின் ஆஃப் படத்துக்கும் ஓகே சொன்ன நெட்பிளிக்ஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள தி கிரே மேன் திரைப்படம் 91 நாடுகளில் நம்பர் 1 படமாக மாறி உள்ளது.
அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட்கேம் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான தி கிரே மேன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவான்ஸ் உடன் தனுஷும் இணைந்து பட்டையை கிளப்பி இருந்தார்.

தி கிரே மேன் கதை
சிஐஏ அமைப்பு குற்றவாளிகளை பயன்படுத்தி சில வழக்குகளை முடித்து வரும் வேலைகளை ரகசியமாக செய்து வரும் நிலையில், அப்படியொருவரை கொல்ல சிறையில் இருக்கும் ரியான் கோஸ்லிங் சிக்ஸ் எனும் பெயரில் வெளியே வருகிறார். அவர் ஒருவரை கொல்லும் போது தான் தெரிய வருகிறது, அவர் செய்வது தப்பான வேலை என்று, அந்த நபர் கொடுக்கும் ஒரு பெண் டிரைவ் போன்ற லாக்கெட்டை எடுத்துக் கொண்டு இவர் எஸ்கேப் ஆக ரியான் கோஸ்லிங்கை போட்டுத் தள்ள கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் கொடூர போலீசாக வருகிறார். கடைசியில் என்ன ஆனது, இவர்கள் இருவரில் யார் வெற்றிப் பெற்றார் என்பது தான் தி கிரே மேன் படத்தின் கதை.

தனுஷுக்கு திட்டு
அவிக் சான் என்கிற பெயருடன் லோன் வுல்ஃப் ஆக படு பில்டப் கொடுக்கப்பட்டு வரும் நடிகர் தனுஷ், அத்தனை பெரிய டீம்களால் பல துப்பாக்கிகளால் சாதிக்க முடியாததை தனியாளாக சென்று ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸை அடித்து உதைத்து அந்த லாக்கெட்டை எடுத்து வருகிறார். பின்னர், இளம் பெண் ஒருவரை கிறிஸ் எவான்ஸ் கடத்தி வைப்பதை அறிந்து கொண்டு அவருக்கு எதிராக திரும்ப, அந்த நாய்க்கு காசு ஏதும் கொடுக்காதீங்க என கிறிஸ் எவான்ஸ் மோசமாக தமிழ் டப்பிங்கிலேயே திட்டும் காட்சி தனுஷ் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

தி கிரே மேன் 2
முதல் பாகத்தில் ஓவராக வாய் பேசிய கிறிஸ் எவான்ஸை கடைசியாக பெண் சிஐஏ அதிகாரி சுட்டுத் தள்ளுகிறார். அத்துடன் அந்த பேஸ்மேக்கர் வைத்த இளம் பெண்ணுக்கு பாதுகாவலனாக ரியான் கோஸ்லிங் மாறுவதோடு முதல் பாகம் முடிகிறது. இந்நிலையில், தி கிரே மேன் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தையும் உருவாக்க ரூசோ சகோதரர்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்பின் ஆஃப்
தி கிரே மேன் 2ம் பாகத்தில் ரியான் கோஸ்லிங் ஹீரோவாக அசத்தப் போவதாகவும், கிறிஸ் எவான்ஸுக்கு பதிலாக வேறு ஒரு ஹாலிவுட் நடிகர் வில்லனாக வருவார் என்றும் கூறுகின்றனர். மேலும், தனியாக ஒரு ஸ்பின் ஆஃப் படத்திற்கு டெட்பூல் இயக்குநர் திரைக்கதை எழுதி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

இரண்டிலும் தனுஷ் வருவாரா
ஏற்கனவே நடிகர் தனுஷின் நடிப்பு பிடித்துப் போய் ரூசோ சகோதரர்கள் அவரை பாராட்டி வரும் நிலையில், தனியாக ஒரு படத்தையும் எடுக்கப் போவதாக கூறி வந்தனர். இந்நிலையில், தி கிரே மேன் மற்றும் ஸ்பின் ஆஃப் என இரண்டு படங்கள் வர உள்ள நிலையில், தனுஷ் அந்த இரு படங்களிலும் வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











