Just In
- 19 min ago
நயன்தாராவின் கோலமாவு கோகிலா ரிமேக்.. திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.. இயக்குனர் உறுதி!
- 40 min ago
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
- 1 hr ago
Bhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'?
- 13 hrs ago
முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்!
Don't Miss!
- News
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
- Sports
இந்திய அணியில் நடராஜன், வாஷி.. ஒரே நாளில் 2 தமிழக வீரர்களுக்கு ரஹானே வாய்ப்பு.. என்ன காரணம்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரண்டு நாட்கள் முற்றிலும் இலவசம்… நெட்பிளிக்ஸின் அதிரடி சலுகை !
சென்னை : நெட்பிளிக்ஸ் அமெரிக்க OTT நிறுவனம் ஆகும். உலகமெங்கும் உள்ள பல சினிமா பிரியர்களாலும் பயன்படுத்த படுகிறது நெட்பிளிக்ஸ்.
திரையில் வரும் படங்களை உரிமை வாங்கி வெளியிடுவதும், சில படங்களையும் தொடர்களையும் நேரடியாகவும் வெளியிட்டு வருகிறது நெட்பிளிக்ஸ் தளம்.
நெட்பிளிக்ஸ் தளம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக #NetflixStreamingFest என்று படங்களை பார்க்க இலவசமாக அனுமதிக்கிறது.

தமிழ் ரசிகர்களுக்கு
இந்த 2 நாட்களில் என்ன பார்ப்பது என தெரியாமல் இருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு Netflix-ல் பார்க்க வேண்டிய சிறந்த தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ!
அந்தகாரம், விசாரணை, மெட்ரோ, வஞ்சகர் உலகம், முரண், ஒத்த செருப்பு, தரமணி, மெஹந்தி சர்க்கஸ், சூப்பர் டீலக்ஸ், கருப்புதுரை, சில்லு கருப்பட்டி. இதில் சில படங்கள் பெரிதாக பேசப்படாமல் போனாலும் பார்ப்பவர்களுக்கு நல்ல திரைப்படத்தை பார்த்த உணர்வை தர கூடிய படங்கள் ஆகும்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு
தெலுங்கு படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கு Netflix-ல் பார்க்க வேண்டிய சிறந்த தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ! பீஷ்மா, C/O கஞ்சரபலேம், அவ், நா பங்காரு தள்ளி, கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா. இந்த படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பார்க்க வேண்டிய படங்கள்
உலக சினிமா விரும்பிகளுக்கு இந்த சலுகை கண்டிப்பாக மிக பெரிய விருந்தாக இருக்கும். அவர்களுக்கான லிஸ்ட் இதோ! Bird Box, Project X, Schlinder's List, Arrival, Hush, Upgrade,6 Underground, The Invisible Guest, In The Shadow Of The Moon ஆகிய படங்கள் உலக சினிமா ரசிகர்கள் Netflix-ல் பார்க்க வேண்டிய முக்கியமான படங்கள் ஆகும்.

டஃப் கொடுக்கும் Netflix
நெட்பிளிக்ஸ் போன்று உலகமெங்கும் பல OTT தளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு இந்திய அளவில் அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்ற முன்னனி OTT தளங்கள் உள்ளன. அவர்களே வியந்து பார்க்கும் வகையில் சலுகையை கொடுத்து நெட்பிளிக்ஸ் தனது தனித்தன்மையை காட்டுகிறது.

மற்றொரு முக்கிய அறிவிப்பு
எதிர்பாத்ததை விட அதிக வரவேற்பு இருந்ததால் பலருக்கு சலுகை கிடைக்காமல் போனது. அவர்களுக்கு இந்த வாரத்தில் ஏதேனும் 2 நாட்களில் அந்த சலுகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.