twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    90 பேருடன் நடந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்.. 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் அப்படியே நிறுத்தம்!

    |

    லக்னோ: நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பிரபல வெப்சீரிஸான Chuna படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா பரவியதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

    Netflix webseries shooting stopped after 5 crew members affects by Corona Virus

    பிரபல பாலிவுட் நடிகர் ஜிம்மி ஷெர்கில் நடிப்பில் உருவாகி வரும் சுனா வெப்சீரிஸின் ஷூட்டிங் லக்னோவில் நடைபெற்று வந்தது.

    மொத்தம் 90 பேர் பங்கேற்ற இந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்கில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அனைவரையும் 4 தனியார் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளனர்.

    கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் ஏகப்பட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே முகாமிட்டு உள்ளது.

    இந்த வயசுலையும் இவ்ளோ முடியா.. வில்லனா நடிக்கலாம்.. சேரனின் நியூ லுக்கை பார்த்து மிரளும் ரசிகர்கள்!இந்த வயசுலையும் இவ்ளோ முடியா.. வில்லனா நடிக்கலாம்.. சேரனின் நியூ லுக்கை பார்த்து மிரளும் ரசிகர்கள்!

    கொரோனாவின் பாதிப்பு இன்னமும் குறையாத நிலையில், பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் படங்களையும் வெப்சீரிஸ்களையும் முடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

    90 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளதாம். மேலும், 60 பேருக்கு என்ன ரிசல்ட் வரும் என்பதை எதிர்பார்த்து படக்குழு காத்திருக்கிறது.

    நெட்பிளிக்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஷூட்டிங்கிலேயே இப்படி கொரோனா பரவல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற படக்குழுவினரும் அச்சத்தில் வேலை பார்த்து வரும் நிலை உருவாகி இருக்கிறது.

    English summary
    Netflix upcoming webseries Chuna shooting stopped after 5 crew members affects by Corona Virus. 90 crew members isolated in hotels.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X