For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காலர் ஆஃப் தி வீக்.. ஆரிக்கா? கமலுக்கா? ஒரே விருமாண்டி புராணம் தான்.. பொங்கலுக்கு வருதுல அதான்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலர் ஆஃப் தி வீக் என ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் ஒருவர் போன் பண்ணி ஒரு போட்டியாளரிடம் பேசி வருகின்றனர்.

  இந்த வாரம் ஆரியிடம் பேச வேண்டும் என்று சொன்ன நபர், முழுக்க முழுக்க பேசியதே கமலிடம் தான்.

  அதிலும், அமேசான் பிரைமில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள விருமாண்டி புரமோஷனை கமல் நல்லாவே பண்ணார்.

  மனசு இல்லை

  மனசு இல்லை

  விஜய் டிவி பிக் பாஸ் டைட்டிலை ஆரிக்கு கொடுக்க திட்டமிடவே இல்லை. ஆனால், வலுத்து வரும் மக்கள் சப்போர்ட் ஆரிக்கு தான் டைட்டில் என்பதை உறுதிபடுத்தி விட்டது. ஆரியை காலி பண்ண கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் எடிட்டர் வேற லெவல் முயற்சிகளை எடுத்தும் தோற்றார். அடுத்த வாரம் என்ன ஆகுதுன்னு பார்க்க அனைவரும் வெயிட்டிங்!

  ஆரிக்கு கேள்வி

  ஆரிக்கு கேள்வி

  இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் காலர் ஆஃப் தி வீக்கில் பேசிய நபர், ஆரியிடம் பேச வேண்டும் என்று சொல்லி, மத்தவங்களுக்கெல்லாம் அட்வைஸ் கொடுக்கிறீங்க, அதுல நீங்க உங்களுக்கு என்ன கத்துக்கிட்டீங்க என்கிற விவகாரமான கேள்வியை முன் வைத்தார். அப்போதும் ஆரி, நேர்மையோடு விளையாடுறேன், மத்தவங்க சொன்ன நல்ல விஷயங்களை நானும் அக்சப்ட் பண்ணியிருக்கேன் என பதில் அளித்து அவரை ஆஃப் செய்து விட்டார்.

  விருமாண்டி படம் ஓடுது

  விருமாண்டி படம் ஓடுது

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னடா திடீரென விருமாண்டி படம் ஓடுதுன்னு ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு கமலிடம் அந்த காலர் விருமாண்டி படத்தை பத்தி பேசினார். எல்லாருக்கும் சம்யுக்தாவின் ரியாக்‌ஷன் தான் மனதில் வந்து சென்றிருக்கும். விருமாண்டி படம் என்னுடைய 17 வயது குழந்தை என அரம்பித்த கமல், ஹீரோயின் காளைகளுக்கு சோறு ஊட்டுவது முதல் மரண தண்டனை கூடாது என வலியுறுத்தியது வரை அத்தனை சாப்டர்களையும் அடுக்கினார்.

  செம கெத்தாக சண்டியர்

  செம கெத்தாக சண்டியர்

  விருமாண்டி படத்திற்கு முதலில் கமல் வைத்த பெயர் சண்டியர் தான். ஆனால், அப்போதைக்கு இருந்த அரசியல் சூழலில் சண்டியர் பெயரை வைக்க விடக் கூடாது என்கிற சூழ்ச்சிகள் நடந்தது, அதைப் பற்றி இப்போ பேச வேண்டாம் என சொல்லி விட்டு சண்டியர் என்கிற பெயரை செம கெத்தாக கமல் சொன்ன விதம் சூப்பர்.

  முடியல ஆரி

  முடியல ஆரி

  கமல் விடுவாருன்னு பார்த்தா, சண்டியர்னு நீங்க சொன்னது, அந்த படத்துல வந்த கதை எல்லாமே ரொம்பவே பிரம்மிப்பாக இருந்தது என ஆரி மீண்டும் கமல் சாருக்கு கொம்பு சீவிவிட, கமல் பிக் பாஸ் செட்டை மறந்து விருமாண்டி செட்டுக்கே சென்று விட்டார். கமலும் ஆரியும் தொடர்ந்து அதை பற்றியே பேசியதை பார்த்த ஆரி ஆர்மியினரே முடியல ஆரி என சொல்லும் அளவுக்கு வந்துவிட்டனர்.

  விருமாண்டி புரமோஷன்

  விருமாண்டி புரமோஷன்

  இந்த காலரும் விஜய் டிவி செட் பண்ண காலர் தான் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வரும் பொங்கலுக்கு அமேசான் பிரைமில் விருமாண்டி படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுகிறது. தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் புரமோஷன் செய்து வரும் நிலையில், கமலும் இந்த மேடையை பயன்படுத்திக் கொண்டு தனது விருமாண்டி பட புரமோஷனை செய்ய இந்த காலர் ஆஃப் தி வீக் போர்ஷனை பயன்படுத்திக் கொண்டார் என்கிற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

  English summary
  Netizen criticize Kamal Haasan used caller of the week portion for Virumandi release promotion. Virumandi will release as a Pongal gift on Amazon Prime.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X