Don't Miss!
- News
ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை.. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு குட்நியூஸ்! எப்போது?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Naane Varuven troll memes: ஃபர்ஸ்ட் ஹாஃப் செம.. செகண்ட் ஹாஃப் சுமை.. சொதப்பிய செல்வராகவன்!
சென்னை: 4 மணிக்கு படத்தை போட்டா தூக்கத்தில் பார்க்கும் ரசிகர்கள் நல்லா இல்லைன்னு சொல்லிடுவாங்கன்னு பொறுமையா 7.50க்கு படத்தை வெளியிட்டும் இப்படி நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கி விட்டதே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து மீம்களாக போட்டு வருகின்றனர்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு என்னடா ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு என பாராட்டிய ரசிகர்கள், இடைவேளைக்கு பிறகு பாகவதர் காலத்துக்கே செல்வா கூட்டிட்டு போயிட்டாரே என பயங்கர கடுப்புடன் வெளியே வருகின்றனர்.
இரண்டாம் பாதியை இன்னும் சிறப்பாக செதுக்கி இருந்தால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் என தனுஷ் ரசிகர்களே வருத்தத்துடன் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.
செல்வராகவன் நினைத்தது புதுப்பேட்டை 2. எடுத்தது நானே வருவேன்... தனுஷ் பங்களிப்பு தெரியுமா?

ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர்
தொடர்ச்சியாக பல படங்கள் சந்திக்கும் அதே பிரச்சனை தான் நானே வருவேன் படத்துக்கும் ஏற்பட்டுள்ளது. முதல் பாதியில் தனுஷின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை கட்டிப் போட்ட அளவுக்கு இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இல்லை என்கிற புகார்கள் சோஷியல் மீடியாவில் குவியத் தொடங்கி உள்ளன.

சிவலிங்கம்.. சிலிண்டர்
முதல் பாதி பாகுபலி படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கி சுமந்து கொண்டு போவதை போல சூப்பரா போன படம் இரண்டாம் பாதியில், நோஞ்சான் சிலிண்டரை தூக்கிச் செல்வது போல டல் அடித்து விட்டது என நெட்டிசன்கள் நானே வருவேன் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும், அந்த கிளைமேக்ஸ் எல்லாம் சுத்தமாக செட் ஆகவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

சொதப்பிய செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன் கம்பேக் கொடுப்பார் என பார்த்தால் இப்படி தம்பியை வைத்து செய்து விட்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். புரமோஷனுக்கு செலவு செய்யாமல் தாணு தட்டிக் கழித்த போதே படத்தில் ஒன்றும் இல்லை என்பது புரிய வேண்டாமா? என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

எங்களுக்கு பிடிக்கும்
செல்வராகவன் ஒரு ஜீனியஸ் இயக்குநர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நானே வருவேன் படம் ஒரு வித்தியாசமான முயற்சி. எப்படி ட்ரோல் செய்தாலும், எங்களுக்கு உங்களைபிடிக்கும் என தனுஷ் ரசிகர்கள் நானே வருவேன் படத்தையும் இயக்குநர் செல்வராகவனையும் கொண்டாடி வருகின்றனர்.

போட்டி குறைந்தது
பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக தனுஷின் நானே வருவேன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்கள் படத்திற்கு மைனஸாக மாறி உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு தமிழ் சினிமாவில் போட்டி குறைந்தது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நாளை வெளியாகும் அந்த படத்தில் ரிசல்ட் எப்படி இருக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்..