Just In
- 40 min ago
காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
- 46 min ago
வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!
- 1 hr ago
ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
- 1 hr ago
650 கோடி விவகாரம்.. அனுராக், டாப்சியை வச்சு விளாசும் கங்கனா ரனாவத்.. வேற யாரும் வாயே திறக்கல!
Don't Miss!
- News
மக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்!
- Automobiles
விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு பிஎஸ்6 வாகனத்தின் விலையையும் அதிகரிக்கும் இசுஸு!! அதுவும் ரூ.1 லட்சமா!
- Finance
வார இறுதியிலும் வீழ்ச்சியில் தான் முடிவு.. சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவு..!
- Lifestyle
மகா சிவராத்திரியில் இந்த மலர்களை சிவனுக்கு வழங்கி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு இருக்கலாமாம்..!
- Sports
ஜெர்ஸி நம்பரில் இப்படி ஒரு விளையாட்டா.... குறும்புக்கார ஹர்பஜன்... உண்மையை உடைத்த லக்ஷ்மணன்
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு டிவிட்டர் பக்கம் திரும்பியுள்ள பாலாஜியை வெளுத்து வாங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ்.
ஆதாரமற்றக் குற்றச்சாட்டு.. அவதூறு புகார்.. நேரில் ஆஜராக நடிகை கங்கனாவுக்கு போலீஸ் சம்மன்!
மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல பட்டங்களை வென்றுள்ள பாலாஜி, படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

அதிக விமர்சனத்துக்குள்ளானவர்
இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிக சர்ச்சைக்குள்ளானவர் பாலாஜிதான். சக போட்டியாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டது, தரக்குறைவாக பேசியது என அதிக விமர்சனத்துக்குள்ளானர்.

மரியாதை கொடுக்கவில்லை
பாலாஜி போன்ற ஆட்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்க கூடாது, அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன. பிக்பாஸ் வீட்டில் இருந்த வயதில் மூத்தவர்கள் யாருக்கும் பாலாஜி மரியாதை கொடுக்கவில்லை.

எப்போது வெளியேறுவார்..
ஆரி, சுரேஷ், சனம் என ஆண் போட்டியாளர்களுக்கும் சரி பெண் போட்டியாளர்களுக்கும் சரி வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால் அவர் எப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

காப்பாற்றிய விஜய் டிவி
ஆனால் கடைசி வரை டிஆர்பிக்காக அவரை நிகழ்ச்சியிலேயே வைத்திருந்த விஜய் டிவி, அவரை ரன்னர் அப் ஆக்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய பாலாஜி எனக்கா ரெட் கார்டு என்று கேட்டிருந்தார்.

மிஸ் பண்ணீங்களா?
இந்நிலையில் மீண்டும் டிவிட்டர் பக்கம் திரும்பியுள்ளார் பாலாஜி. ஹலோ மை டியர் டிவிட்டர் ஃபேமிலி. என்னை மிஸ் பண்ணீங்களா என கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை விளாசி தள்ளியுள்ளனர்.

வொர்ஸ்ட் ஆட்டியூட்
பாலாஜியின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், டுபாக்கூர் நீயெல்லாம் ரெட் கார்டு வாங்கிட்டு வர வேண்டியது.. விஜய் டிவி உன்னை காப்பாத்திருச்சு.. கேம் ஸ்பாய்லர்ஸ் உன் வொர்ஸ்ட் ஆட்டியூட் மாத்திக்க.. மூத்தவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொள் என விளாசியுள்ளார்.

மனுஷனாக மாறு..
மற்றொரு நெட்டிசனான இவர், பாலா, இனிமேலாவது மனிதனா மாறு.. உன்னோட மிருக குணத்தை விடு.. சனம் போன்ற எந்த பெண்களையும் இழிவாக பேசாதே.. நீ சனம் பற்றி கேவலமாக பேசியதற்கு உண்மையாக மன்னிப்பு கேள்.. கடைசியாக ரொம்ப ஆடாமல் இரு.. ஏனெனில் "அடக்கம் அமரருள் உய்க்கும்.." ஆல் த பெஸ்ட்.. என பதிவிட்டுள்ளார்.

டைட்டிலுக்காக விளையாட வில்லை
இருப்பினும் பலரும் பாலாஜியை பாராட்டியும் டிவிட்டியுள்ளனர். அவற்றுக்கு எல்லாம் பாலாஜி பதில் தெரிவித்துள்ளார். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்றும் நான் டைட்டிலுக்காக விளையாட வில்லை என்றும் கூறியுள்ளார்.

பெரிய திரையில் பார்க்கலாம்
பாலாஜியின் பதிவுகளை பார்த்த நெட்டிசன் ஒருவர் நாங்கள் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணினோம் என்று கூறினார். அதற்கு பதிலளித்த பாலாஜி, நீங்கள் சீக்கிரமே என்னை பெரிய திரையில் பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.