For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் பல்லி மாதிரி இருக்கேன்.. அதான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா? கலங்க வைத்த சுச்சி!

  |

  சென்னை: தான் பல்லி மாதிரி இருப்பதால்தான் தன்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டார்களா என சுச்சி ஃபீல் செய்தது அவரது ரசிகர்களை கலங்க செய்துள்ளது.

  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பங்கேற்றார்.

  மூன்று வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த சுச்சி மூன்றாவது வார இறுதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

  பிளான் போட்டு நாமினேஷன் டாப்புள் பாஸை தட்டி தூக்கிய அனிதா.. அம்பலமான உண்மை.. என்னா ஸ்ரேட்டர்ஜி!

  பாலாஜியிடம் ஐக்கியம்

  பாலாஜியிடம் ஐக்கியம்

  சுச்சி பிக்பாஸ் வீட்டில் நுழைந்தபோது இருந்த தெளிவு, உள்ளே சென்ற பிறகு அவரிடம் இல்லை. பாலாஜியிடம் ஐக்கியமானதும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் அவர் அதிகளவாக இன்ட்ராக்ட் செய்யாததுமே அவரது விரைவான வெளியேற்றத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

  பிக்பாஸுக்கு டார்ச்சர்

  பிக்பாஸுக்கு டார்ச்சர்

  மக்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யாததுமே அவர் வெளியேற காரணம் என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் சுச்சியின் பிஹேவிங்கில் திடீர் திடீரென மாற்றம் ஏற்பட்டது. தானாக அழுவது, சிரிப்பது என அன்ஸ்டேபிளாக இருந்தார். அடிக்கடி பிக்பாஸையும் டார்ச்சர் செய்தார், அதன் காரணமாகவே நிகழ்ச்சிக் குழு அவரை வெளியேற்றியதாகவும் தகவல் பரவியது.

  பேசவில்லை

  பேசவில்லை

  அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறும் போது, ஆரி, சனம், அனிதா பாலாஜி மற்றும் கேபியை தவிர வேறு யாரும் அவரை செண்ட் ஆஃப் செய்ய வரவில்லை. அர்ச்சனா அவரது கேங் ஒரு பை கூட சொல்லவில்லை, ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

  ஏதாவது நடந்ததா?

  ஏதாவது நடந்ததா?

  வெளியே வந்தப் பிறகும் ஹவுஸ்மேட்ஸின் பரிந்துறையின் பேரில் வெளியேற்றப்பட்டுள்ளீர்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல் கூறினார். அவர் ஹவுஸ்மேட்ஸ் நாமினேஷன் செய்ததை அப்படி குறிப்பிட்டாரா அல்லது வேறு ஏதாவது நடந்ததா என்பது தெளிவாகவில்லை.

  பல்லி மாதிரி இருக்கேன்

  பல்லி மாதிரி இருக்கேன்

  ஆனால் சுச்சி பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததில் இருந்து வெளியே வரும் வரை நடந்த சில சம்பவங்கள் அடங்கிய க்ளீப்பிங்ஸ் வீடியோவாக பிக்பாஸ் மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அதனை மெய் மறந்து பார்த்தார் சுச்சி. பின் கமலிடம் எல்லாரும் அழகா இருக்காங்க, நான் மட்டும் பல்லி மாதிரி இருக்கிறேன்.

  ஒல்லியா அக்லியா

  ஒல்லியா அக்லியா

  ரொம்ப ஒல்லியா அக்லியா இருக்கிறேன். அதனால்தான் என்னை வெளியே அனுப்பிட்டாங்களா என்று அப்பாவியாய் கேட்டார். அதனைக் கேட்ட கமல் உங்களின் ஹியூமர் சென்ஸ், எனக்கு புரிகிறது. நீங்கள் என்ன காரணத்திற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தீர்களோ அது நிறைவேறும் என நம்புகிறேன் என்றார்.

  பிக்பாஸ் நினைவுகள்

  பிக்பாஸ் நினைவுகள்

  இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாகிவிட்டார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது பிக்பாஸ் நினைவுகளை பகிர்ந்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட காஃபி கப், ஈமோஜி அட்டை என அனைத்தையும் தனது நினைவுகளாக ஷேர் செய்து வருகிறார்.

  லைட் அன்ட் ஷேடோ

  லைட் அன்ட் ஷேடோ

  அந்த வகையில் தனது போட்டோ ஒன்றையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு பிளேயிங் வித் லைட் அன்ட் ஷேடோ என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஃபில்டர்ஸ் உதவியோடு பல பட்டி டிங்கரிங் வேலைகளை செய்துள்ளார் சுச்சி.

  கவனம் செலுத்துங்கள்

  கவனம் செலுத்துங்கள்

  அவரது இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், நீங்கள் உள்ளேயும் சரி வெளியேயும் சரி ரொம்பவே அழகு என பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் உங்கள் முடி மீதும் தோலின் மீதும் அதிக கவனம் செலுத்துங்கள் என்றும் அக்கறையுடன் பதிவிட்டுள்ளனர்.

  சந்தோஷமாக இருங்கள்

  சந்தோஷமாக இருங்கள்

  இன்னும் சிலர் அந்த வேல்ஸ் கேங்கை வச்சு செய்திருக்கலாம் என்றும் உங்கள் திறமைதான் உங்களை அழகாக காட்டும், அந்த வகையில் நீங்கள் பல திறமைகளை கொண்ட ஒரு பெண், எதையும் நினைத்து வருத்தப்படாதீர்கள். சந்தோஷமாக இருங்கள் நல்லா சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர்.

  லோ பட்ஜெட் மோனலிசா

  லோ பட்ஜெட் மோனலிசா

  இன்னும் சில நெட்டிசன்கள், நீங்கள் ஒரு லோ பட்ஜெட் மோனலிசா, எதற்கும் கவலைப்படக்கூடாது என கூறியுள்ளனர். சிலர், நன்றாகதானே இருந்தீர்கள் திடீரென என்ன ஆனது ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள் என்றும் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு மாதத்தில் எடையை கூட்டி விடலாம் கவலைப்படாதீர்கள் என்றும் ஆறுதலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

  English summary
  Suchi Shares her new photo on Instagram with filters. Netizens advising Suchi to do not worry about her physical appearance.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X