For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  புரமோ புல்லட் மாதிரி இருக்கும்.. எபிசோடு புஸ்வாணமாகிடும்.. பங்கமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோக்கள் வார இறுதி நாட்களில் தீயாக இருப்பது போல நிகழ்ச்சி இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் மீண்டும் முன் வைத்துள்ளனர்.

  வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

  இந்த வாரம் அர்ச்சனாவின் வெளியேற்ற ரகசியமும் வழக்கம் போல கசிந்து விட்ட நிலையில், நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

  ரம்யாவுக்கு நோஸ் கட்.. அர்ச்சனாவுக்கு டோஸ்.. வளைச்சா? நிமிர்த்திடுவேன்.. நான் கேட்பேன்.. கமல் இடி!

  டிவியை தூக்கிப் போட்டு

  டிவியை தூக்கிப் போட்டு

  இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோக்களை பார்த்து நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே சமயம், வழக்கம் போல புரமோவில் காட்டும் காட்சிகளை நிகழ்ச்சியில் கட் செய்து விட்டு உப்மாவாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனிதாவின் சிரிப்பையும் அழுகையையும் பார்த்து விட்டு டிவியை தூக்கி உடைத்து விட தோன்றுகிறதாம் இந்த நெட்டிசனுக்கு! ரிமோட் வச்சி சேனல் மாத்திடலாமே?

  விஜய் டிவி லேபர்

  விஜய் டிவி லேபர்

  "விஜய் டிவி லேபர் ரியோவை முதலில் சேவ் செய்ததற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்!.. கொடுத்த பேப்பரை அப்படியே வாசித்த ஆண்டவரின் செயல் நகைப்புக்குரியது!..." என இந்த நெட்டிசன் ரொம்பவே கொந்தளித்துள்ளார். மேலும், ஆரியை தான் முதலில் சேவ் செய்திருக்க வேண்டும், ஓட்டுப் போட்ட நாங்கள் என்ன முட்டாளா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  என்ன ஆரம்பிக்கலாமா

  என்ன ஆரம்பிக்கலாமா

  மூன்றாவது புரமோவில் ரம்யாவுக்கும் அர்ச்சனாவுக்கும் கமல் சரியான சவுக்கடி பதில் கொடுத்துள்ள நிலையில், என்ன ஆரம்பிக்கலாமா என கமல்ஹாசனின் புதிய படமான விக்ரம் படத்தின் புகைப்படத்தை போட்டு ட்ரோல் செய்துள்ளார் இந்த பிக் பாஸ் ரசிகர். இன்னைக்காவது தரமான சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  தலைவா

  தலைவா

  இந்த வாரமும் ஆரி சேவ் ஆனதும், மூன்றாவது புரமோவில் ஆரிக்காக கமல் பேசுவதையும் பார்த்த ஆரியின் ஆர்மியினர் "தலைவா.. தொடர்ந்து முன்னேறுங்கள்" என கமெண்ட் அடித்தும், ஆரியை பற்றி புகழ்ந்தும் வருகின்றனர். அதேசமயம் ஆரி ஹேட்டர்கள் அவரை கலாய்த்தும் ஏகப்பட்ட மீம்களை போட்டும் ஃபேன் ஃபைட் நடத்துகின்றனர்.

  பல்லை காட்டாதே

  பல்லை காட்டாதே

  "ரம்யா.. எல்லாத்துக்கும் உன்னுடைய பல்லை காட்டாதே.. இன்று நீ அசிங்க படுவாய்" என ரம்யா பாண்டியன் கமலிடம் நோஸ் கட் வாங்கியதை வைத்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சாஃப்ட் ஹர்ட்டுக்கு இன்னைக்கு கொஞ்சம் அடி அதிகம் தான் போல தெரியுது.. ஷோவில் பார்க்கலாம்.

  புல்லட் புரமோ

  புல்லட் புரமோ

  புரமோ புல்லட் மாதிரி தான் இருக்கும்.. ஆனால், எபிசோடு புஸ்வாணமாகிடும் என பிக் பாஸ் நிகழ்ச்சியையே பங்கமாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அர்ச்சனா இந்த வாரம் வெளியேறிய விஷயம் கசிந்த நிலையில், விஜய் டிவிக்கு ஃபேவராக தான் ஷோ போகுது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படின்னா போன வாரம் நிஷா போயிருக்கக் கூடாதே என்ற வாக்குவாதமும் நடைபெற்று வருகிறது. இன்னைக்கு கன்ஃபார்ம் என்டர்டெயின்மென்ட் இருக்கு!

  English summary
  Netizens again trolled Bigg Boss show after watching today third promo. Also many fan fights there in the comment section of Bigg Boss promo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X