twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஷ்மீருக்கு காவித் தலைப்பாகை கட்டிய அமலா பால்: வெளுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

    By Siva
    |

    சென்னை: காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை அமலா பாலை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளார்கள்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. இதற்கு பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அமலா பாலும் தனது கருத்தை தெரிவித்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

    சிம்பு மீண்டும் வம்பு... கைவிடப்படும் மாநாடு - காரணம் சொல்லும் சுரேஷ் காமாட்சி சிம்பு மீண்டும் வம்பு... கைவிடப்படும் மாநாடு - காரணம் சொல்லும் சுரேஷ் காமாட்சி

    அமலா பால்

    ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த அமலா பால் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் தலையில் காவி தலைப்பாகை கட்டியபடி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இது போன்ற முடிவுகளை அமலுக்கு கொண்டு வர முடியும் என்று பாராட்டியிருந்தார்.

    நெட்டிசன்கள்

    நெட்டிசன்கள்

    அமலா பாலின் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்தனர். அது என்ன காஷ்மீர் தலையில் காவி தலைப்பாகை, நம் தேசியக் கொடியின் மற்ற இரண்டு வர்ணங்கள் எங்கே. இப்படி யோசிக்காமல் எதையாவது செய்து நானும் கருத்து தெரிவிக்கிறேன் என்று சீன் போட வேண்டாம் என்று நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    அம்மு முதல் முறையாக நீங்கள் போட்ட போஸ்ட்டை பார்த்து கடுப்பாகியுள்ளோம். இனி உங்களை சமூக வலைதளத்தில் பின்தொடரப் போவது இல்லை என்று அமலா பாலின் ரசிகர்கள் சிலரே தெரிவித்துள்ளனர். வரலாறு பற்றி எதுவும் தெரியாமல் உளற வேண்டாம் என்று நெட்டிசன்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

    விளம்பரம்

    விளம்பரம்

    உங்களை போன்ற பிரபலங்களுக்கு ஜம்மு காஷ்மீரின் வரலாறு பற்றி எதுவுமே தெரியாது. இருப்பினும் அனைத்தும் தெரிந்தது போன்று நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறீர்கள். எந்தெந்த விஷயத்தில் விளம்பரம் தேடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. காஷ்மீருக்கு தலைப்பாகை போடுவது இருக்கட்டும் நீங்கள் முதலில் ஆடை அணியுங்கள் என்று சிலர் அமலா பாலை பற்றி கேவலமாக பேசியுள்ளனர்.

    English summary
    Netizens blast actress Amala Paul after she commented about the scrapping of article 370.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X