»   »  சுள்ளான் சுள்ளான் தான் கேப்டன் கேப்டன் தான்: விஜயகாந்துக்கு குவியும் பாராட்டுகள்

சுள்ளான் சுள்ளான் தான் கேப்டன் கேப்டன் தான்: விஜயகாந்துக்கு குவியும் பாராட்டுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கேப்டன் விஜயகாந்தை பாராட்டிய எஸ்.வி. சேகர்- வீடியோ

சென்னை: கேப்டன் விஜயகாந்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர்.

நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்துகிறார்கள். இந்த கலைவிழாவுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோரை அழைக்கவில்லை.

இது விஷால் வேலையாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த்

வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது. HATS OFF 🎩 TO U CAPTAIN 👍 என ட்வீட்டியுள்ளார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர்.

சமம்

வாழ்கையில் சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர்கள் யாரையும் சமமாக நடத்துவர்..

பாராட்டு

@iVijayakant 🙏👏👏👏👌👌👌👍👍👍💐💐💐 உண்மையில் கேப்டனின் பங்கு இந்த விசயத்தில் அளப்பறியது!

கடன்

நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு அனைவரிடமும் நன் மதிப்பு பெற்று அனைவரின் மனம் கோணாமல் ஒற்றுமையாக சங்கத்தை வழி நடத்திய பெருமை கேப்டன் அவர்களை மட்டுமே சாரும் மிக சிறந்த ஆளுமை திறன் கொண்ட மாமனிதர்..

கேவலம்

பல வித்தைகளை காண்பித்து நாட்டு மக்களிடமிருந்து பணத்தை பறித்த நடிகர் கூட்டமானது ஊதாரிதனமாக செலவு செய்துவிட்டு, மீண்டும் மக்களிடமே வந்து பணம் கேட்பது கேவலமான செயல்.

English summary
Netizens are praising Captain Vijayakanth for his awesome work at the Nadigar Sangam. Actor cum BJP functionary S. Ve. Shekher tweeted about the Malaysia Natchathira Kalaivizha and Captian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X