செம ஆஃபர்... புத்திசாலி மனுஷன்...சோஷியல் மீடியாவை கலக்கும் சிபி
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் 3 லட்சத்துடன் இந்த டாஸ்க் துவங்கப்பட்டது. 3 லட்சம் இருக்கும் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அட்வைஸ் வழங்கி விட்டு சென்றார் சரத்குமார்.
Recommended Video
3 லட்சத்தில் இருந்த பணம் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டது. தொகை உயர உயர போட்டியாளர்களின் மனநிலை மாற துவங்கியது. இவ்வளவு வைத்தால் எடுப்பேன் என சிலர் வெளிப்படையாகவே சொல்ல துவங்கினர். அதன்படி 10 லட்சத்திற்கும் அதிகமாகவே தொகை உயர்த்தப்பட்டது. கடைசியாக 12 லட்சமாக உயர்த்தப்பட்டது.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சிபி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் அவரது ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

சிபியை பாராட்டிய சரத்குமார்
கோல்டன் டிக்கெட்டை பெறுவதற்கான இறுதிப்போட்டி வரை வந்த சிபி, நிச்சயம் அந்த டிக்கெட்டை பெறுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அமீர், டிக்கெட் டு ஃபினாலேவை வென்றார். அதற்கு பிறகும் இறுதிப் போட்டிக்கு செல்வார், டைட்டில் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். வெளிப்படையாக பேசக் கூடியவர் என சரத்குமாரை நேரடியாக பாராட்டினார் சிபி.

சிபி முடிவுக்கு இது தான் காரணமா
இவ்வாறு அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய முழு பலத்தை கொடுத்த சிபி, கடந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இருந்து கடைசி ஆளாக காப்பாற்றப்பட்டார். இதுவும் கூட அவர் பணப்பெட்டியை எடுத்துச் சென்றதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சிபியின் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவரது இந்த முடிவு சரியானது தான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

புத்திசாலிதனமான முடிவு
கடந்த சீசனில் ரூ.5 லட்சம் மட்டும் தான் வைக்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் 3 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 12 லட்சம் என்பது நல்ல ஆஃபர் தான். அதனால் அந்த பணத்தை எடுத்துச் சென்றது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு என்று பலரும் அவருக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கலக்கும் சிபி...குவியும் பாராட்டு
சிபியின் இந்த முடிவு தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் டிரெண்டிங் ஆகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து 12 லட்சம் பணப்பெட்டிடன் சிபி வெளியேறிய தகவல் பரவியதை அடுத்து ட்விட்டரில் #Ciby என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள சிபிக்கு எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











