துணிவா இல்ல தூக்கமா?: வடிவேலு மீம்ஸுடன் ட்ரோலாகும் அஜித்தின் துணிவு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சென்னை: அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அவரது 61வது படத்தில் நடித்து வருகிறார்.

ஏகே 61 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

துணிவு என்ற டைட்டிலில் வெளியான அஜித்தின் ஏகே 61 பட போஸ்டரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. 'ஏகே 61' என்ற டைட்டிலில் ஷூட்டிங் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் போர்க்கோடி தூக்கி வந்தனர். ஏற்கனவே வலிமை படத்துக்கும் இதேபோல் நெட்டிசன்கள் செய்த அட்ராசிட்டியால், உலகளவில் ட்ரெண்ட் ஆனது. இப்போது ஏகே 61 படம் பற்றியும் அப்டேட் ரசிகர்களுக்கு, படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

அஜித் எடுக்கும் துணிவு

அஜித் எடுக்கும் துணிவு

அதன்படி, தற்போது ஏகே 61 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏகே 61 படத்துக்கு 'துணிவு' என்ற டைட்டிலை அறிவித்துள்ள படக்குழு, அஜித்தின் ஸ்டைலிஷான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ரூபாய் நோட்டு டிசைனில் துணிவு என்ற டைட்டிலும், அதன் கீழே கையில் துப்பாக்கியுடன் அஜித் உட்கார்ந்திருப்பது போன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாகியுள்ளது. அஜித் ஒரு ஈஸி சேரில் அமர்ந்திருப்பதைப் போல் இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் செம்மையாக ட்ரோல் ஆகி வருகிறது.

வடிவேலு மீம்ஸுடன் துணிவு போஸ்டர்

வடிவேலு மீம்ஸுடன் துணிவு போஸ்டர்

ஏற்கனவே 'வலிமை' படத்தின் டைட்டிலை கம்பீரமாக வைத்துவிட்டு, படத்தின் மேக்கிங்கில் சொதப்பியிருந்தார் ஹெச் வினோத். இப்போது துணிவு என டைட்டில் வைத்துவிட்டு, தொட்டிலில் தூங்கும் குழந்தையைப் போல அஜித்தை போஸ்டரில் காட்டியுள்ளார் ஹெச் வினோத். இதனைப் பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், அஜித் துணிவோடு வருவாரா இல்லை தூங்குகிறாரா என கேட்டு வருகின்றனர். அதேபோல், 'வில்லு' படத்தில் வரும் வடிவேலுவின் ஈஸி சேர் காமெடியை மீம்ஸாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

துணிவு யாருக்கு வேண்டும்

துணிவு யாருக்கு வேண்டும்

வடிவேலு சேரில் இருந்து விழுவதைப் போல, அஜித்தும் தூங்கி விழுந்துவிடப் போகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ துணிவு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது அஜித்துக்கா அல்லது இந்தப் படத்தைப் பார்க்கப் போகும் ரசிகர்களுக்கா என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். வலிமையைப் போல அஜித் படத்துக்கான எந்த மாஸும் இல்லாத துணிவு என்ற டைட்டில், இப்போது செம்ம ட்ரோல் செய்யப்படுவது சோஷியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X