‘லிப் லாக்‘ போட்டோ கணவர் எடுத்தாருன்னு சொன்னியேம்மா.. ஜாய் கிரிஸில்டாவுக்கு குவியும் ட்ரோல்!

சென்னை: நடிகரும், சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிறிசால்டா காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கும் நிலையில், இணையவாசிகள் கர்மா இஸ் பூமரங் என ஜாய் கிரிஸில்டாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் பேசு பொருளாக இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கும் நிலையில் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து செய்து கொண்டதாகவும், அவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை ஜாய் கிரிஸில்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Madhampatty Rangaraj joy crizildaa

2வது திருமணம்: மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கும் போது முதல் மனைவியை விவகாரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும், இந்த திருமணம் சட்டப்படி செல்லாத திருமணம் என்றும், மாதம்பட்டி ரங்கராஜ், எப்போதும் விவாகரத்தான பெண்கள், வாழ்க்கையை இழந்த பெண்களுடன் பழகிவிட்டு கழட்டிவிட்டுவிடுவார். இப்படித்தான் இந்த பெண்ணுடனும் பழகி இருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அன்பாலோ செய்தார்: அதைத்தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த போட்டோ இணையத்தில் வெளியானது. இந்த போட்டோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஜாய் கிரிஸில்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாதம்பட்டி ரங்கராஜுடன் மிகவும் நெருக்கமாக, அதாவது உதட்டோடு உதட்டில் முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு, இந்த போட்டோவை எடிட் செய்ததே மாதம்பட்டி ரங்கராஜ் தான் என பதிவிட்டு இருந்தார். அதன் பின் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவை அன்பாலோ செய்தார்.

ஏமாற்றி விட்டார்: இந்நிலையில் ஜாய் கிரிஸில்டா சென்னை போலீஸ் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ், கோவிலின் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாக்கிவிட்டு, தற்போது தன்னை நிராகரிப்பதாகவும், ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் என்னை தாக்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் எங்களை சேர்த்து வைக்கும் படியும் அந்த புகார் மனுவில் ஜாய் கிரிஸில்டா உள்ளார்.

கர்மா இஸ் பூமரங்: மெதுவாக புகைந்து கொண்டு இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரம் தற்போது வீதிக்கு வந்துள்ளது. இணையத்தில் இந்த செய்தி பெரிய அளவில் வைரலான நிலையில், இதைப்பார்த்த இணையவாசிகள், முத்தம் கொடுத்த வீடியோவை எடிட் செய்ததே மாதம்பட்டி ரங்கராஜ் என சொன்னீங்களே என்றும், அப்போ, எல்லாம் பொய்யா, கர்மா இஸ் பூமரங் என ஜாய் கிரிஸில்டாவை ட்ரோல் செய்து வருகின்றனர். பிரச்சனை இவ்வளவு பூதாகரமாக புகைந்து கொண்டு இருக்கும் நிலையிலும், மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X