எப்பவும் சும்மா தான் இருக்காரு… அப்புறம் எப்படி இவ்ளோ க்ரஷ்: கதிருக்கு ஸ்கெட்ச் போடும் ஹவுஸ் மேட்

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 36 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள் சில காதல் கதைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது புதிய காதல் முயற்சியும் நெட்டிசன்கள் பார்வையில் சிக்கியுள்ளது.

அசல் கோளாறு - நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா வரிசையில் அடுத்து சிக்கியுள்ள ஜோடியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்ற்னர்.

பிக் பாஸ் 37வது நாள்

பிக் பாஸ் 37வது நாள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், மைனா நந்தினியும் இணைந்தார். அதேநேரம், இதுவரை மொத்தம் 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா ஆகியோரை தொடர்ந்து, இந்த வாரம் மகேஸ்வரியும் வெளியேறினார். மேலும், இந்த வாரத்துக்கான தலைவராக மணிகண்டன் தேர்வான நிலையில், அடுத்தக்கட்ட போட்டிகள் சூடு பிடிக்கத் தொடங்கியது.

கதிர் மீது க்ரஷ்

கதிர் மீது க்ரஷ்

பிக் பாஸ் சீசன் 6ல் முதல் வாரம் முதலே அமைதியாக இருந்து கவனம் ஈர்த்து வருபவர் கதிர். முதல் இரண்டு வாரங்களில் எவிக்ஸன் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்து தப்பிய கதிர், அடுத்தடுத்த வாரங்களில் சக போட்டியாளர்களால் டார்க்கெட் செய்யப்படுகிறார். அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தால் டைட்டில் கிடைத்து விடும் என Safe கேம் ஆடி வருகிறார் கதிர். அதேநேரம், அவர் மீது பிக் பாஸ் பெண் போட்டியாளர்கள் சிலருக்கு க்ரஷ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புரிச்சுக்கோங்க பாஸ்

புரிச்சுக்கோங்க பாஸ்

தீபாவளி அன்று நடந்த போட்டியில், தனக்கு பிடித்த நபர் என கதிருக்கு விளக்கு கொடுத்த மகேஸ்வரி, அவர் மீது கொஞ்சம் க்ரஷ் இருப்பதாக வெளிப்படையாக சொல்லிவிட்டார். அதேபோல், ஷெரினாவும் கதிரை கரெக்ட் செய்ய முயற்சிப்பதாக சில பேச்சுகள் அடிப்பட்டன. அதேபோல், ஆயிஷா, குயின்ஷி ஆகியோரும் அடிக்கடி கதிரிடம் கேஷுவலாக நெருக்கம் காட்டி பழகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஷிவினும் கதிரிடம் மறைமுகமாக காதலை தெரிவிக்க போராடி வருகிறார். நேற்றைய தினம் ஒரு மணி நேரமாக கதிரிடம் பேசிய ஷிவின், உங்களை எனக்கு பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் என சூசகமாக பலமுறை பொடிவைத்து பேசினார்.

நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

ஷிவினின் விடா முயற்சியை பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் கதிர் தான் காதல் மன்னனாக வலம் வருகிறார், சும்மாவே இருந்தாலும் பெண் போட்டியாளர்களின் கிரஷாக மஜா செய்து வருவதாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல், இன்றைய பிபி ரோஸ்ட் டாஸ்க்கிலும் கதிர் - ஷிவின் மேடையேறியது இன்னும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இன்னொரு பக்கம் ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா இருவரின் காதல் டிராக்கையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X