Don't Miss!
- News
நெருங்கிய காலக்கெடு.. தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு.. ஆதாரை இணைச்சிட்டீங்களா? ரொம்ப முக்கியம்
- Technology
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
என்ன கோபால் இதெல்லாம்..எல்லாமே டூப்பா?பாவம்யா அந்த மனுஷன்.. அஜித்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : துணிவு படப்பிடிப்பு தளத்தில் அஜித் டூப்புடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் என் வினோத் மற்றும் போனிகபூர் மூன்றாவது முறையாக இணைத்திருக்கும் திரைப்படம் துணிவு.
வங்கி கொள்ளையை மையமாக வைத்திருக்கும் இத்திரைப்படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி படத்தின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
பொங்கல் ரேஸில் உக்கிரமான வாரிசு, துணிவு… பஞ்சாயத்தை கூட்டிய விஜய், அஜித் ரசிகர்கள்!

துணிவு
துணிவு திரைப்படத்தில் அசுரன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாவனி, அமீர் மற்றும் சிபி ஆகியோர் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸ்
ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக்கில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் துணிவு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

எல்லாமே டூப்பா?
இந்நிலையில், துணிவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் அஜித்திற்கு டூப்போட்ட நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தை கிண்டலடிக்கும் வகையில், மெரினா படத்தில் சிவகார்த்திகேயன் ஓவியாவின் மனதில் இடம் பிடிக்க, டூப் போட்டு பைக்கில் வீலிங் செய்து காட்டுவார். கடைசியில், தானே வீலிங் செய்தது போல சீன் போடுவார். இந்த வீடியோவை அந்த படத்துடன் எடிட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

எங்க தல முடிவு பண்ணிட்டாரு
ஒரு பக்கம் நெட்டிசன்கள் இவரை கிண்டலடித்து வர, அஜித்தின் தீவிர வெறியர்கள், விஜய் கூட மோத டூப் போதுன்னு எங்க தல முடிவு பண்ணிட்டாரு ப்ரோ என்றும், அவர் ரியல் ரேசர் என்பதை மறந்துடாதீங்க என்று இணையத்தில் ரசிகர்கள் மாறி மாறி கருத்துக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

வருத்தத்தில் ரசிகர்கள்
அண்மையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அசோக் லேலண்ட் வாகனத்தின் மீது முகமூடி அணிந்து கொண்டு அஜித்தும், அவர் அருகில் மஞ்சு வாரியரும் அமர்ந்து இருப்பது போல படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், அஜித்தை காண ரசிகர்கள் கால் கடுக்க காத்திருந்தார்கள் பின்னர் தான் அது அஜித் இல்லை டூப்பு என தெரிந்து ரசிகர்கள் வருத்தத்துடன் களைந்து சென்றனர்.