பீஸ்ட் விஜய்க்கே டஃப் கொடுத்த ஷாருக்கான்... பதான் ட்ரெய்லரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்...

மும்பை: பாலிவுட் கிங் ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
பதான் வரும் 25ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது.
ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள பதான் ட்ரெய்லர் தற்போது நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்படுகிறது.

 வெளியானது பதான் ட்ரெய்லர்

வெளியானது பதான் ட்ரெய்லர்

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முக்கியமாக 2018க்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் பாலிவுட்டிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே பதான் ஃபர்ஸ்ட் சிங்கிளில் தீபிகா படுகோன் கவர்ச்சியாக ஆட்டம் போட்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பதான் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.

 ஷாருக்கானின் ஆக்‌ஷன் ட்ரீட்

ஷாருக்கானின் ஆக்‌ஷன் ட்ரீட்

சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பதான் படத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனேவும் வில்லனாக ஜான் ஆப்ரஹாமும் நடித்துள்ளார். ஷாருக்கான் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் பறக்க உருவாகியுள்ளன. ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பதான் ட்ரெய்லரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

 ஜெட்ல இப்படியும் போகலாமா?

ஜெட்ல இப்படியும் போகலாமா?

இந்தியாவின் ரகசிய ஏஜெண்டாக நடித்துள்ள ஷாருக்கானும் வில்லனாக வரும் ஜான் ஆப்ரஹாமும் வெறித்தனமாக ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளனர். ஆனால் இது ஒரு காட்சியில் ரொம்பவே ஓவர் டோஸ்ஸாக மாறியுள்ளது. ஷாருக்கானும் ஜான் ஆப்ரஹாமும் Human Jet-இல் ஆகாயத்தில் மோதிக்கொள்கின்றனர். அப்போது இருவருமே கண்ணில் கிளாஸ் கூட அணியாமல் வெறும் கண்களை வெறிச்சு பார்த்தபடி ஃபைட் செய்துள்ளது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஜெட் கிளாஸ் இல்லையென்றாலும் சாதாரணமான கண்ணாடி கூடவா அணியாமல் சண்டை போட வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 பீஸ்ட் விஜய்க்கு டஃப்

பீஸ்ட் விஜய்க்கு டஃப்

கடந்தாண்டு வெளியான பீஸ்ட் படத்தில் விஜய் ஜெட்டில் பறப்பதாக ஆக்‌ஷன் காட்சி இடம்பெற்றிருந்தது. அதிலும் விஜய் கிளாஸ் அணியாமல் வேற லெவலில் சாகசம் செய்திருந்தார். இப்போது பதான் படத்தில் விஜய்க்கே டஃப் கொடுக்கும் வகையில் ஷாருக்கான் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக அமைந்துள்ளது. ஹீரோயிசம் தேவை தான், ஆனால் மக்களையும் ரசிகர்களையும் இப்படியா ஏமாற்றுவது. வெறும் கண்களால் ஜெட்டை இயக்க முடியுமா, இதெல்லாம் ஓவராக இல்லையா என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X