twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யாவை பார்த்ததில் இதை மறந்துட்டோமே...விக்ரம் படத்தில் இதை எங்கப்பா காணோம்?

    |

    சென்னை : விக்ரம் படத்தை ரசிகர்கள் ஒரு புறும் கொண்டாடி வந்தாலும், மறுபுறம் அதில் சில விஷயங்கள் மிஸ் ஆகி இருப்பதை தற்போது தான் கண்டுபிடித்து வெளியிட்டு வருகின்றனர்.

    டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் நேற்று ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். சர்வதேச தரத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக புகழ்ந்து வருகிறார்கள்.

    ”தம்பி சார்”.. ரோலக்ஸ் மோடுக்கே சூர்யாவை வைத்திருக்க விரும்பும் கமல்.. அடுத்த சம்பவம் கன்ஃபார்ம்!”தம்பி சார்”.. ரோலக்ஸ் மோடுக்கே சூர்யாவை வைத்திருக்க விரும்பும் கமல்.. அடுத்த சம்பவம் கன்ஃபார்ம்!

    விக்ரம் முதல் நாள் வசூல்

    விக்ரம் முதல் நாள் வசூல்

    இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடிகளை வசூல் செய்துள்ளது. ஓப்பனிங் நாள் வசூலில் பீஸ்ட், வலிமை படங்களின் வசூலை மிஞ்ச முடியாவிட்டாலும் ரஜினியின் அண்ணாத்த படத்தின் வசூலை தொட்டு விட்டது. சென்னையில் மட்டும் விக்ரம் படம் 1.71 கோடியை வசூல் செய்துள்ளது. இருந்தாலும் இனி வரும் நாட்களில் விக்ரம் படத்தின் வசூல் அதிகரிக்கும் என பலரும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

    சூர்யா பற்றியே பேச்சு

    சூர்யா பற்றியே பேச்சு

    கமல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் படம் என்பதால் விக்ரம் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்ற தகவல் கசிந்ததில் இருந்தே மீடியா, சோஷியல் மீடியா என அனைத்திலும் சூர்யாவின் ரோல் பற்றிய பேச்சாக தான் உள்ளது. படம் ரிலீசான பிறகும் சூர்யாவின் ரோல் பற்றிய பேச்சாக தான் உள்ளது.

    அட இதை மறந்துட்டோமே

    அட இதை மறந்துட்டோமே

    அதோடு சூர்யா, விக்ரம் 3 படத்தில் நடிக்கிறார். கைதி 2 படத்தில் சூர்யா தான் வில்லன் என்றெல்லாம் பேச்சு அடிபடுவதால் சூர்யா பற்றிய பேச்சாக தான் உள்ளது. சூர்யா பற்றி மட்டுமே கவனித்துக் கொண்டிருந்ததால் விக்ரம் படத்தில் பல விஷயங்கள் மிஸ் ஆனதை பலரும் கவனிக்க தவறியதை நெட்டிசன்கள் சிலர் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

    Recommended Video

    Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
    இந்த சீனை எங்கப்பா காணோம்

    இந்த சீனை எங்கப்பா காணோம்

    அதில் மிக முக்கியமானது, படத்தில் De Aging technology மூலம் கமலை 1980 களில் உள்ளதை போல் இளமை தோற்றத்தில் காட்டி உள்ளனர் என்பது தான். 10 கோடி செலவில் கமலை இளமை தோற்றத்தில் காட்டி உள்ளார்கள். இது படத்தின் பிளாஷ் பேக் காட்சியாக 10 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதுதான் படத்தின் ஹைலைட்டாக கூறப்பட்டது. ஆனால் படத்தில் இந்த காட்சி இடம்பெறவில்லை. இதை நெட்டிசன்கள் கூறிய பிறகு தான் பலரும் யோசித்து, ஆமாம்...சூர்யாவை பார்த்ததில் இதை மறந்து விட்டோமே என கேட்டு வருகின்றனர்.

    ஏன் இந்த சீனை வைக்கல

    ஏன் இந்த சீனை வைக்கல

    ஒருவேளை படத்தின் நீளம் கருதி நீக்கி விட்டார்களா அல்லது ஏற்கனவே கூறப்பட்டதை போல் De aging டெக்னாலஜி பயன்படுத்திய காட்சிகள் சரியாக வராததால் அந்த பகுதியை நீக்கி விட்டார்களா என ரசிகர்கள் குழப்பமாக கேட்டு வருகின்றனர்.

    English summary
    After watched Vikram movie, netizens asked that where is Kamal's de aging technology used young age scenes in film. Fans forget this scenes due to focused on Suriya's character. Now fans also confused that why movie makers not added this scenes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X