»   »  'வெட்கங்கெட்ட செல்ஃபி' வெளியிட்ட நடிகை: வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

'வெட்கங்கெட்ட செல்ஃபி' வெளியிட்ட நடிகை: வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சேலை கட்டி இடுப்பு தெரியும்படி செல்ஃபி எடுத்த தங்கல் நடிகையை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

ஆமீர் கானின் தங்கல் படத்தில் மூத்த மகள் கீதாவாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். அவர் தற்போது மீண்டும் ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சனா செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சனா

சேலை உடுத்தி இடுப்பு தெரியும்படி புகைப்படம் எடுத்து வெட்கம்கெட்ட செல்ஃபி என்று தலைப்பிட்டு அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பாத்திமா சனா ஷேக்.

நெட்டிசன்ஸ்

நெட்டிசன்ஸ்

இப்படியா சேலை அணிந்து புகைப்படம் எடுப்பது. வெட்கமே இல்லையா. முதலில் ஒழுங்காக சேலை உடுத்த கற்றுக் கொள்ளுங்கள் என்று சனாவின் செல்ஃபியை பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

உங்களுக்கே தெரிந்ததால் தான் வெட்கம்கெட்ட செல்ஃபி என்று தலைப்பு வைத்துள்ளீர்கள். ஒழுங்காக உடை அணிய கற்றுக் கொள்ளுங்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

அருமை

அருமை

சனாவின் செல்ஃபியை பார்த்த சிலரோ அழகாக உள்ளீர்கள், செம ஹாட், கத்ரீனாவின் தங்கை போன்று இருக்கிறீர்கள் என்று புகழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்

முஸ்லீம்

முன்னதாக பாத்திமா சனா ஷேக் வெளிநாட்டில் பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். முஸ்லீமாக இருந்து கொண்டு இப்படியா பிகினி புகைப்படத்தை வெளியிடுவதை என்று பலர் அவர் விளாசினர்.

English summary
Netizens troll Dangal girl Fatima Sana Shaikh for her shameless selfie in saree.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil