ரஜினியின் இமேஜை டேமேஜ் செய்ய வேறு யாரும் தேவையில்லை, இவரே போதும்

By Siva

சென்னை: தவறான நேரத்தில் தப்பான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்குகிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

மழை இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னைவாசிகள் பாவம் தண்ணீருக்காக ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள்.

தண்ணீர் பஞ்சத்தை மனதில் வைத்து பிக் பாஸ் 3 வீட்டில் கூட நீச்சல் குளத்தில் நீர் நிரப்பவில்லை. இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மகிழ்ச்சியை பகிர செய்த காரியம் வேறு மாதிரியாகிவிட்டது.

மகன்

மகன்

தமிழக மக்கள் ஒரு குடம் தண்ணீர் கிடைத்தால் பொக்கிஷம் கிடைத்தது போன்று மகிழும் நேரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்தோ தனது செல்ல மகன் வேதுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ நாங்க குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம், நீங்கள் நீச்சல் அடிக்கிறீர்களோ என்று கேட்டு அவரை வறுத்தெடுத்துவிட்டனர்.

சவுந்தர்யா

சவுந்தர்யா

நெட்டிசன்கள் தன்னை கண்டமேனிக்கி திட்டியதை பார்த்த சவுந்தர்யா தனது நீச்சல்குள புகைப்படத்தை நீக்கினார். அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் ரஜினிகாந்த் பெயரை கெடுப்பதற்கு வேறு யாரும் தேவையில்லை, சவுந்தர்யா மட்டும் போதும் என்று விமர்சித்துள்ளனர். சவுந்தர்யா ஏதோ ஒரு நினைப்பில் செய்த காரியம் அவரின் அப்பாவுக்கும் சேர்த்து திட்டு வாங்கிக் கொடுத்துள்ளது.

தேனிலவு

முன்னதாக புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானதை பார்த்து நாடே துக்கத்தில் இருந்தபோது சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் வெளிநாட்டிற்கு தேனிலவுக்கு சென்ற இடத்தில் புகைப்படங்கள் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். அதை பார்த்த அனைவரும் அவரை திட்டினார்கள். நாடே சோகத்தில் இருக்கும்போது இந்த சவுந்தர்யாவால் எப்படி இது போன்ற புகைப்படங்களை வெளியிட முடிகிறது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

 தவறான ட்வீட்

தவறான ட்வீட்

சவுந்தர்யா தவறான நேரத்தில் தவறான புகைப்படங்களை வெளியிடுகிறார். அவர் என்னவோ தனது சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள அப்படி செய்கிறார். ஆனால் அவர் புகைப்படங்களை வெளியிடும் நேரம் தான் சரியில்லை. அதனால் அவர் மட்டும் அல்ல அவரின் அப்பாவுக்கும் சேர்த்து திட்டு விழுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X