"வாட்ஸ்அப் அங்கிள்.." அலைபாயுதே மாதவனை ஆவேசமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ஏன் தெரியுமா?

சென்னை : 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார் நடிகர் மாதவன். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ஜுலை 1 ம் தேதி ரிலீசாக உள்ளது.

Recommended Video

Actress Misha Ghoshal| Rocketry படத்துல Madhavan க்கு மகளாக நடிக்கிறேன் | *Interview

தமிழில் சில காலங்களாக மாதவன் நடித்த படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ராக்கெட்ரி படத்தின் ரிலீசை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். ஷாருக்கான் இந்தி வெர்சனிலும், சூர்யா தமிழ் வெர்சனிலும் கெஸ்ட் ரோல் செய்துள்ளனர்.

ராக்கெட்ரி படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளதால் படத்திற்கான ப்ரொமோஷன் பெரிய அளவில் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 நம்பி நாராயணன் பயோபிக்

நம்பி நாராயணன் பயோபிக்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதாகி, அதனால் அவர் அனுபவித்த துன்பங்களும், அதிலிருந்து அவர் மீண்டுவந்து தன்னை நிராபராதி என்று நிரூபித்த சட்டப் போராட்டங்களையும் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் பிரதமர் மோடியே நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணனை நேரில் அழைத்து பேசினார். இந்த போட்டோக்கள் வெளியாகி செம வைரலானது.

பஞ்சாங்கம் பற்றிய கேள்வி

பஞ்சாங்கம் பற்றிய கேள்வி

இந்நிலையில் ப்ரொமோஷனை முன்னிட்டு செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்த மாதவன் கூறிய கருத்துக்கள் தான் அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்யும் நிலைக்கு மாறியுள்ளது. செய்தியாளர் ஒருவர், உலகத்தில் பல நாடுகள் இருந்தாலும், நம் நாட்டில் மட்டும் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், கோள்கள் உள்ளிட்டவற்றை அந்தக் காலத்திலே கணித்திருந்தார்கள். அதுக்கும் இப்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

மாதவன் சொன்ன பஞ்சாங்க விளக்கம்

மாதவன் சொன்ன பஞ்சாங்க விளக்கம்

இதற்கு பதிலளித்த மாதவன், "நிச்சயமாக தொடர்பு இருக்கு. 'மார்ஸ் மிஷன்' என்பது பூமியிலிருந்து, செவ்வாய் கிரகம் வரை அந்த செயற்கைகோள் சென்று சேருவதுதான். அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இன்ஜின் (3 விதமாக சொல்வாங்க) தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.

 பஞ்சாங்கம் மூலம் செயற்கைகோள் ஆய்வு

பஞ்சாங்கம் மூலம் செயற்கைகோள் ஆய்வு

இருந்தாலும் இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல்னு சொல்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினாங்க. நம்பி நாராயணின் மருமகன் அருணண், அவர் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநர். அவர் இந்தக் கதையை சொல்ல சொல்ல அப்படியே புல்லரிச்சு போயிருச்சு. பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது என்றார்.

 ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

பஞ்சாங்கத்தை வைத்து செயற்கைகோளை ஏவினார்களா...அறிவியல் பற்றி தெரிந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருங்கள் என மாதவனை சோஷியல் மீடியாவில் கண்டபடி கலாய்த்து வந்தனர். மாதவன் பேசியதும், அதற்காக அவர் பற்றி வரும் ட்ரோல்களும் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாதவன் பேசியது சரியா, தவறா என்பது பற்றி மங்கள்யான் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடமே மீடியாக்கள் விளக்கம் கேட்டன.

மாதவன் பேசியது சரியா – தவறா

மாதவன் பேசியது சரியா – தவறா

அதற்கு பதலளித்த மயில்சாமி அண்ணாத்துரை, முதலில் இந்த படத்திற்கு எனது வாழ்த்துக்கள். நம்பி நாராயணன் பற்றி படம் எடுத்துள்ளனர். இது பற்றிய அவரும் என்னிடம் பேசினார். ப்ரீமியர் ஷோவிற்கு வர சொல்லி அழைத்தார். ஆனால் என்னால் வர முடியாது. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது என நினைக்கிறேன். நன்றாக வர வேண்டும். புத்தகமாக வந்த போது இந்த கதையை நானும் படித்திருக்கிறேன்.

மயில்சாமி அண்ணாத்துரையின் விளக்கம்

மயில்சாமி அண்ணாத்துரையின் விளக்கம்

மாதவன் பேசியதை நானும் காட்டேன். அதில் ஒரு வார்த்தை தவிர மற்ற அனைத்தும் மிக சரியானது தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கம் என்ற வார்த்தை மட்டும் தவிர்த்திருந்தால் மற்றவை சரியாகத்தான் உள்ளது. அவரும் ஒரு இன்ஜினியர் என்பதால் அவருக்கும் பல விஷயங்கள் தெரிந்திருக்கும், தெரியாமல் சொல்ல முடியாது. அந்த காலத்தில் பஞ்சாங்க அடிப்படையில் தான் கோள்கள் எங்கிருக்கிறது என்பதை கணித்து, அதன் அடிப்படையில் ராக்கெட் ஏவப்பட்டது.

நம்மகிட்ட அப்டேட் இல்லை

நம்மகிட்ட அப்டேட் இல்லை

2000 ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்திருக்கும், எந்த இடத்தில் இருந்திருக்கும், அதிலிருந்து சூரியன் கோள்கள் எங்கு இருக்கும் என்பதை சொல்ல முடியும். இதை 1000 வருடங்களுக்குள் அப்டேட் செய்து சொல்லும் போது தவறு நேர்ந்து விடும். பஞ்சாங்கம் என்பது இப்போது எப்படி என்பதை வைத்துக் கொண்டு இதற்கு முன்னால் இருப்பதை கணிக்க முடியும். நம்மிடம் உள்ள பஞ்சாங்கத்தை அப்பப்போ அப்டேட் செய்வதில்லை. ஒரு காலத்தில் செய்தனர். ஆனால் இப்போது அப்படி செய்வதில்லை என்றார்.

மாதவனுக்கு இப்படி ஒரு பெயரா

மாதவனுக்கு இப்படி ஒரு பெயரா

என்னதான் மயில்சாமி அண்ணாத்துரையே, மாதவன் பேசியதில் பெரிய தவறு ஏதும் இல்லை என சொல்லிவிட்டாலும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து மாதவனை கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்ல வாட்ஸ்ஆப் அங்கிள் என புதிய பெயரும் வைத்துள்ளனர். வாட்ஸ்ஆப்பில் தான் இப்படி டுபாக்கூர் விஷயங்கள் எல்லாம் வரும். நீங்க அதேயே மிஞ்சிட்டீங்களே என விளக்கம் வேறு சொல்லி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X