Just In
- 3 min ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 28 min ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 36 min ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 56 min ago
பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!
Don't Miss!
- Sports
ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்? பின்னணி
- News
பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
- Lifestyle
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வரலாற்றில் இன்று பொன்நாள்!.. காண்டு மம்மி அர்ச்சனா வெளியேற்றம்.. கொண்டாடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா வெளியேறும் தகவலை அறிந்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நாள் முதலே அன்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி தனக்கென ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டார்.
அன்பு ஜெயிக்கும், அன்பை வைத்த கப்பை வாங்குவேன் என்று பேசி வந்த அர்ச்சனா, ஆரி, அனிதா உள்ளிட்ட சிலரிடம் தனது அன்பை காட்டவே இல்லை. இதனால் அவருடைய அன்பு ஆதாயத்துக்கான அன்பு என்று கூறி வந்தனர் ரசிகர்கள்.
காப்பாற்றப்படும் போட்டியாளர் யார்? ஆப்பை அறியாமல் சிரித்தப்படி இருக்கும் அர்ச்சனா.. முதல் புரமோ!

ஆரியை தரக்குறைவாக பேசி
மேலும் பிக்பாஸ் வீட்டிலும் தான் வைத்ததுதான் ராஜ்ஜியம் என அதகளப்படுத்தி வந்தார். இதனால் கமலின் வாரனிங்குக்கு ஆளானார். இருந்த போதும் அடங்காத அர்ச்சனா, தனக்கென ஒரு குரூப்பை வைத்துக் கொண்டு ஆரியை தரக்குறைவாக பேசி வந்தார்.

இந்த வாரம்தான் நியாயம்..
தனக்கு தான் கப்பு என்று ஓவர் நம்பிக்கையில் விளையாடி வந்தார் அர்ச்சனா. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் அர்ச்சனா. அர்ச்சனா வெளியேறியதை அறிந்த ரசிகர்கள் பிக்பாஸ் இந்த வாரம் தான் நியாயமுடன் நடந்துள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.

டம்மி மம்மி வெளியேற்றம்
அர்ச்சனா வெளியேறியததை அறிந்த இந்த நெட்டிசன், சத்தியமா கடவுள் இருக்கான் குமாரே... டம்மிமம்மி அர்ச்சனா வெளியேற்றம் என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சொல்லுங்க பாஸ்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாஸ் பாஸ் பாஸ் போகும்போது அந்த ரம்யாவை சேர்த்து கூட்டிட்டு போக சொல்லுங்க பாஸ் என ரம்யாகை வச்சு செய்துள்ளார்.

முக்கியமான ஆணிகள்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன். அடேய் அடுத்த வாரமாச்சும் தேவை இல்லாத ஆணிகளிலே முக்கியமான ஆணிகலனா, அந்த ஷிவானி, ஆஜித்த வெளிய அனுப்புங்கடா..
இந்த பாலாஜி சப்போர்ட்டர்ஸ் போடுற வோட்னால பொழச்சிட்டு அவங்க ரெண்டு பேரும் பண்ணுற அழும்பு தாங்க முடியலடா சாமி என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

சாயுங்காலம் உளருவார்
பாலாஜி முருகதாஸ் காலையில திருந்துவார் சாயங்காலம் உளருவார்.. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

மிக்சர்லாம் சேஃப்
எப்படியும் அடுத்த வாரம் அனிதா, ஆரி, பாலா, ரம்யா ஃபேன்ஸ் அடிச்சுப்பாங்க.. இந்த மிக்ஸர்லாம் சேப்ஃபா ஃபைனல் போய்ருவாங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

காண்டு மம்மி வெளியேற்றம்
பிக்பாஸ் வரலாற்றில் இன்று பொன்நாள்!.. காண்டு மம்மி அர்ச்சனா வெளியேற்றம் என அர்ச்சனா வெளியேறியதை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

குஷன் சீட்டு போட்டு..
நேற்று அர்ச்சனா கடவுள் இருக்கானா குமாரு என்று கேட்டதை பார்த்த இந்த நெட்டிசன், கடவுள் சும்மா சாதாரணமா இல்ல ஒரு குஷன் சீட்டு போட்டு உட்கார்ந்திருக்கார் ஆரி பக்கத்துல என குறிப்பிட்டுள்ளார்.

காயப்படுத்தும் புன்னகையும் தப்பு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எதை வேணா மக்கள் பொறுத்துக்குவோம்.. கும்பலா கிண்டலடிக்கிறது புல்லிங் பண்ற பிஹேவியர பொறுத்துக்க முடியாது.. அடுத்தவங்கள காயப்படுத்துற சின்ன புன்னகையும் தப்பு.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

'அன்ப' அள்ளி வெளியே தள்ளுவார்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கடவுள் இன்னிக்கு டிவியில் இருப்பார்.. 'அன்ப' அள்ளி வெளியே தள்ளுவார்! என கிண்டலத்துள்ளார்.