நிரூப்புக்கு என்ன பெயர் வைக்கலாம்? புதுசு புதுசா யோசித்து பங்கமாக கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

சென்னை: இந்த வாரம் முதல் நபராக கமல் என் பெயரை அழைத்து என்னை சேவ் பண்ணலான்னா என் பெயரையே நான் மாத்திக்கிறேன் என நிரூப் சவால் விட்ட நிலையில், சவாலில் தோற்ற நிரூப்பை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ஹலோ நிரூப் சாரா? எப்போ சார் உங்க பெயரை மாத்தப் போறீங்க என ஈவு இரக்கமின்றி மீம்களை போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர்.

நிரூப்பின் பெயரை ஆல்டர் செய்து ஏகப்பட்ட பட்டப் பெயர்களை வைத்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிளாக் ரோஸ்

பிளாக் ரோஸ்

கருப்பு ரோஜா கொடுத்து ஆரம்பத்திலேயே பிக் பாஸ் போட்டியாளர்கள் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் இருந்து அவரை ஓரங்கட்டினார்கள். அதனால் கடுப்பான நிரூப் தாமரை உடன் சேர்ந்து கொண்டு ராஜு மற்றும் பிரியங்காவுக்கு எதிராக கொளுத்திப் போடும் வேலையை செய்து வந்தார்.

சவால் விட்ட நிரூப்

சவால் விட்ட நிரூப்

அதன் காரணமாக வெளியேறிய நிரூப் தாமரையிடம் தனியாக அமர்ந்து கொண்டு நீ வேணா பாரு இந்த வாரம் கமல் சார் என்னை தான் முதல் நபராக சேவ் செய்வார். அப்படி சேவ் பண்ணலன்னா என் பெயரையே மாத்திக்கிறேன் என சவால் விட்டார்.

ராஜு சேவ்ட் ஃபர்ஸ்ட்

ராஜு சேவ்ட் ஃபர்ஸ்ட்

இந்த வாரமும் முதலில் ராஜு காப்பாற்றப்பட்டார் என கமல் சொல்லி சென்றதும் நிரூப் ரொம்பவே அப்செட் ஆகி விட்டார். நிரூப் சார் எப்போ உங்க பேரை மாத்திக்கப் போறீங்க என நெட்டிசன்கள் நக்கலடித்து கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். நிரூப்புக்கான புதிய பெயரையும் சஜஸ்ட் பண்ணி வருகின்றனர்.

நிரூப்புக்கு என்ன பெயர் வைக்கலாம்?

நிரூப்புக்கு என்ன பெயர் வைக்கலாம்?

சவாலில் தோற்ற நிரூப்பின் பெயரை உடனடியாக மாற்றிவிட வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கமெண்ட் போட்டும் மீம்களை வெளியிட்டும் நிருப்பை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனார். இதில், வேடிக்கை என்னவென்றால் ராஜு ரசிகர்கள் இல்லாத மற்ற போட்டியாளர்களின் ரசிகர்களும் நிரூப்பின் பெயரை மாற்ற துடித்து வருகின்றனர்.

வேகாத பருப்பு

வேகாத பருப்பு

நிரூப் எனும் வார்த்தையை வைத்தே ஏகப்பட்ட பெயர்களை பிக் பாஸ் ரசிகர்கள் ஆலோசித்து வருகின்றனர். நிரூப்புக்கு பெரிய நெருப்புன்னு நினைப்பு.. ஆனால், ஷோ எண்ட்ல வேகாத பருப்பு ஆகிட்டாப்புல என கலாய்த்து வேகாத பருப்பை இந்த நெட்டிசன் வைக்க கமெண்ட் செய்துள்ளார்.

சினேக் பாபு

பச்சோந்தி போல மாறி விடுகிறான் நிரூப் என்றும் ஆரம்பம் முதலே பிரியங்காவுடன் சேர்ந்து விளையாடி விட்டு இப்போது தனியாக கேம் ஆட மாட்றாங்க என புகார் அளித்து வருகிறார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சினேக் பாபு என்கிற பெயரை மாத்திக்கோங்க நிரூப் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தில்லா கேட்கிறார்

தில்லா கேட்கிறார்

ஒரு பக்கம் ரூபிணி உள்ளிட்ட பெயர்களுடன் நிரூப்பின் ஹேட்டர்கள் கலாய்த்து வரும் நிலையில், மறுபக்கம் இந்த சீசனில் தில்லா எல்லாரையும் பார்த்து கேள்வி கேட்கும் ஒரே ஆள் நிரூப் தான் என்றும் பிசிக்கல் டாஸ்க் கிங் நிரூப் என்றும் நிரூப்பின் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து அவரை டாப் 3 இடத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X