»   »  ஏம்மா... இதுக்குப் பேரு ஆரஞ்சுப் பழமாம்மா..?- கார்த்திகாவை கலாய்த்த நெட்டிசன்ஸ்

ஏம்மா... இதுக்குப் பேரு ஆரஞ்சுப் பழமாம்மா..?- கார்த்திகாவை கலாய்த்த நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'கோ', 'அன்னக்கொடி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை கார்த்திகா. தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 'ஜோஷ்' படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இவர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். இவரது தங்கை துளசியும் 'கடல்', 'யான்' படங்களில் நடித்திருக்கிறார்.

கார்த்திகா, ஆரஞ்சுப் பழம் ஒன்றைக் கையில் வைத்தபடி எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

ஆர்கானிக் ஆரஞ்சு

கார்த்திகா, தனது வீட்டில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மரத்தில் முதன்முதலில் காய்த்த மினி ஆரஞ்சுப் பழத்தைக் கையில் வைத்தபடி எடுத்த போட்டோவை ட்விட்டரில் பதிவேற்றியிருக்கிறார்.

எலுமிச்சை

'இது ஆரஞ்சுப் பழமே இல்லம்மா... எலுமிச்சம்பழம்!' என ஒருவர் கார்த்திகாவை கலாய்த்திருக்கிறார்.

அபூர்வமானது

'இதெல்லாம் எளிதில் காணக்கிடைக்காத அபூர்வமானது. மியூசியத்துல வைங்க.' என ஒருவர் கமென்ட் அடித்திருக்கிறார்.

அழகான கை

உங்க கையி இருக்கே... என வர்ணித்திருக்கிறார் ஒரு ரசிகர். (எதைப் பார்க்கச் சொன்னா எதைய்யா பார்க்குறீங்க)

இது ஆரஞ்சுப் பழமா

எது... இதுக்குப் பேரு ஆரஞ்சுப் பழமா..? அப்ப எங்கண்ணனும் நானும் அடிச்சிப் படிச்சு உறிச்சு ஆளுக்கு அஞ்சாறு சுளை திம்போமே.. அதுக்குப் பேரென்னா?

English summary
Actress Karthika Nair is the heroine in the films 'Ko' and 'Annakkodi'. She has uploaded a photo of orange fruit on Twitter. 'My first home grown organic mini orange', she said.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil