For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிரிச்சது ஒரு குத்தமாய்யா.. பிக் பாஸ் ஜூலியை ஒரே ஒரு எபிசோடில் ஓவர் டேக் செய்த விஜே பார்வதி!

  |

  சென்னை: பிக் பாஸ் ஜூலியை சர்வைவர் நிகழ்ச்சியின் ஒரே ஒரு எபிசோடில் ஓவர் டேக் செய்து விட்டார் விஜே பார்வதி என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

  ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க ஏகப்பட்ட ஆக்‌ஷன்கள் நிறைந்த புதிய ரியாலிட்டி தொடராக சர்வைவர் தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஆரம்பமானது.

  சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... ஃபஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா ? சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்... ஃபஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா ?

  நேற்றைய எபிசோடில் விஜே பார்வதி கீழே தடுமாறி விழ அதைப்பார்த்து நடிகை சிருஷ்டி டாங்கே சிரித்த நிலையில், அதை வைத்தே சண்டையை ஸ்டார்ட் செய்து டி.ஆர்.பியை எகிற வைத்துள்ளார் விஜே பார்வதி.

  ஷோன்னா சண்டை இருக்கணும்

  ஷோன்னா சண்டை இருக்கணும்

  சர்கஸ்ன்னா சிங்கம் இருக்கணும்.. ரியாலிட்டி ஷோன்னா சண்டை இருக்கணும் என்பதை ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவும் பல காலமாக ஃபாலோ செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி டி.ஆர்.பியை ஏற்றி வருகிறது. இந்நிலையில், சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அந்த வேலையை விஜே பார்வதி செய்து பலரது திட்டுக்களை வாங்கி குவித்து வருகிறார்.

  கீழே விழுந்த பார்வதி

  கீழே விழுந்த பார்வதி

  தீவில் உள்ள கடற்கரை மணலில் சரியாக கூட நடக்க தெரியாமல் தொப்புன்னு கீழே விழுந்த விஜே பார்வதியை பார்த்த உடனே நடிகை சிருஷ்டி டாங்கே அடக்க முடியாமல் சிரிக்க மற்ற போட்டியாளர்கள் சிலரும் சிரித்து விட்டனர். இதனை மனதில் வைத்துக் கொண்டு தலைவருக்கான போட்டி முடிந்ததும் தனது டீமுடன் அமர்ந்து பேசும் போது இந்த பஞ்சாயத்தை கிளப்பி பிரச்சனையை பெரிதாக்கினார் விஜே பார்வதி.

  எப்படி சிரிக்கலாம்

  எப்படி சிரிக்கலாம்

  ஒவ்வொரு டாஸ்க்கிலும் உடம்பு பெண்டு கழண்டு போகும் அளவுக்கு அடி விழுகிறது. அதை எல்லாம் விட்டு விட்டு, லேசா மணலில் விழுந்ததும் அதை பார்த்து சிரித்த சிருஷ்டி டாங்கேவை பார்த்து எப்படி சிரிக்கலாம் என கேள்வி கேட்டு சண்டையை ஆரம்பித்தார் விஜே பார்வதி. கேப்டன்ஸி டாஸ்க்கில் விஜே பார்வதியை நிக்க வைத்து அடித்திருந்தால் அவ்வளவு தான் அழுது நிகழ்ச்சியை விட்டே ஓடியிருப்பார் போல..

  கன்னக் குழி அழகி

  கன்னக் குழி அழகி

  சும்மாவே பேசும் போதே சிருஷ்டி டாங்கேவின் கன்னத்தில் குழி விழும். லேசா சிரித்தால் அந்த கன்னக் குழி இன்னும் பெரிதாகத்தான் தெரியும். அவ்வளவு பெரிய கண்ணாடி போட்டிருக்கும் விஜே பார்வதியின் கண்களுக்கு இன்னமும் ஜூம் பண்ணி பார்த்தது போல தெரிந்தது தான் இந்த பிரச்சனைக்கே காரணமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.

  இன்னொரு ஜூலி

  இன்னொரு ஜூலி

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டியவரை சர்வைவர் நிகழ்ச்சிக்கு தவறாக அனுப்பி வைத்து விட்டார்கள் என்றும், இன்னொரு ஜூலி கிடைச்சிட்டா என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் பிக் பாஸ் ஜூலி மற்றும் விஜே பார்வதியை கம்பேர் பண்ணி பங்கமாக ட்ரோல்களை பறக்க விட்டு வருகின்றனர்.

  சிரிச்சது ஒரு குத்தமாய்யா

  சிரிச்சது ஒரு குத்தமாய்யா

  ஏற்கனவே விஜே பார்வதிக்கும் நெட்டிசன்களுக்கும் ஆகாது. பல முறை அவரை பங்கமாக கலாய்த்துத் தள்ளி உள்ளனர். இந்நிலையில், ஷோ ஆரம்பித்த உடனே முதல் ஆளாக இப்படியொரு சண்டையை ஆரம்பித்த அவரை பார்த்த ரசிகர்கள் சிருஷ்டி சிரிச்சது ஒரு குத்தமாய்யா என கேட்டு வருகின்றனர்.

  கடைசியா தடுத்த கேப்டன்

  கடைசியா தடுத்த கேப்டன்

  விஜே பார்வதி மற்றும் சிருஷ்டி டாங்கேவின் வேடர்கள் அணியின் கேப்டனாக தேர்வான லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி உள்ளிட்ட மற்ற குழுவினர் பார்வதி போடும் சண்டையை நல்லா வேடிக்கை பார்த்து விட்டு தடுக்கவோ கருத்து சொல்லவோ முன் வராமல் இருந்தனர். கடைசியாக கேப்டன் லக்‌ஷ்மி பிரியா தனது கடமையை செய்ய ஆர்டர் கிடைத்தது போல சண்டை போட்டது போதும் இருவரும் பேசி பிரச்சனை தீர்த்துக் கொண்டீர்கள், கை குலுக்கி சமாதானம் ஆகிக் கொள்ளுங்கள் என நைட் மோட் லைட்டில் காட்டி அந்த ஸ்க்ரிப்டட் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர் என்றும் நெட்டிசன்கள் சர்வைவர் ஷோவை வச்சு செய்து வருகின்றனர்.

  English summary
  Vj Parvathy starts unwanted fight with Actress Shrusti Dange in a latest episode makes fans compare and troll her with Bigg Boss Julie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X