Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்ரோமோவே வேணாம்...கொஞ்சம் சும்மா இருங்க...போனி கபூரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை : வலிமை ரிலீஸ் நெருங்கி வருவதால் தயாரிப்பாளர் போனி கபூர் தினம் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டு வருகிறார். ஆனால் இத்தனை நாட்களாக போனி கபூரிடம் ப்ரோமோ, அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள் இப்போது ப்ரோமோவே வேணாம் என கூறி போனி கபூரை கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.
அஜித் நடித்த வலிமை படம் 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் படம் துவங்கியதாக அறிவிப்பு வெளியிட்டதோடு சரி, வேறு எந்த தகவலையும் படக்குழு வெளியிடவே இல்லை. கொரோனா காரணமாக ஷுட்டிங் தொடர்ந்து தாமதமாகி வந்தது. ஃபஸ்ட் லுக் கூட வெளியிடாததால் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்தனர். இருந்தாலும் படக்குழு அதை கண்டு கொள்ளவேயில்லை.
அண்ணன்
சூர்யாவுடன்
ஓட்டுப்
போட
வந்த
தம்பி
கார்த்தி..
டிரெண்டாகும்
புகைப்படங்கள்!

தினம் ஒரு ப்ரோமோ
பிறகு ஒரு வழியாக ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள் என வெளியிட்டார்கள். ரிலீஸ் தேதியை கடைசி வரை ரகசியமாக வைத்து, நவம்பர் மாதம் தான் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டார் போனி கபூர். இப்போது ரிலீஸ் பிப்ரவரி 24 என முடிவாகி விட்டதால், இன்னும் ப்ரோமோஷன் வேலைகளை துவங்கவில்லையே என ரசிகர்கள் குறைபட்டு கொண்டிருந்தனர். இதை நீக்குவதற்காக கடந்த சில நாட்களாக தினம் ஒரு ப்ரோமோவை வெளியிட்டு வருகிறார் போனி கபூர்.

ரோலர் கோஸ்டர் ரைட் ரெடி
பாடல்கள், அதிரடி ஸ்டன்ட் ஆக்ஷன் காட்சிகள் என ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் போனி கபூர். இதே போல் இன்றும், ஆக்ஷன் மற்றும் எமோஷன் ரோலர் கோஸ்டர் ரைட் இன்னும் 5 நாட்களில் துவங்க உள்ளதாக குறிப்பிட்டு, அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவிற்கு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. மற்றொரு புறம் இதை வைத்தே நெட்டிசன்கள் பலர் போனி கபூரை கலாய்த்து வருகின்றனர்.

உங்க ப்ரோமோவே வேணாம்
உங்க கிட்ட ப்ரோமோ வெளியிட சொன்னா நீங்க முழு படத்தையே வெளியிட்டுகிட்டு இருக்கீங்க. இந்த பைக் ரேஸ் சீனை விட்டா, படத்தில வேற சீனே இல்லையே. இதை மட்டுமே காட்டிட்டு இருக்கீங்க. உங்க ப்ரோமோவே வேணாம். கொஞ்சம் சும்மா இருங்க. அம்மா பாடல் ப்ரோமோ மட்டும் தான் வித்தியாசமாக இருக்கு. மற்றபடி எல்லா ப்ரோமோலையும் இதே சீனே வருது. இந்த பஸ் ஃபைட் பார்க்க தான் மொத்த சினிமா துறையும் வெயிட் பண்ணிட்டு இருக்கு. நீங்க என்னடான்னா இதவே காட்டி த்ரில்லிங்கை குறைச்சுகிட்டு இருக்கீங்க என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video


இது சாம்பிள் தாம்ப்பா
அதே சமயம் அஜித்தின் அதிதீவிர ரசிகர்கள், இந்த ப்ரோமோக்களை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். போனி கபூருக்கு ஆதரவாக. எங்கே மொத்த படத்தையும் வெளியிட்டாங்க. படம் மொத்தம் 3 மணி நேரம் ஓடுது. அத மறந்துடாதீங்க. இதெல்லாம் சும்மா சாம்பிள் தான். மெயின் பிக்சர் இத விட மாஸா இருக்கும். அதை மறைமுகமாக சொல்ல தான் போனி கபூர் இந்த ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.