இவங்க இல்லைன்னா.. இந்த சீசனே இல்லை.. பாலாவையும் ஆரியையும் கொண்டாடும் பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: எப்போ ஆரியுடன் சண்டை போடணும், எப்போ மன்னிப்பு கேட்டு கமல் சாரை ஏமாற்றி பாராட்டு வாங்கணும்னு நல்லா தெரிஞ்சு கேம் ஆடி வருகிறார் பாலா.

பாலா இப்படித் தான் நல்லவர் மாதிரி பேசுவார். கமல் எபிசோடு முடிந்த இரவே ஆரியுடன் மீண்டும் மல்லுக்கு நிற்பார்.

இனிமேல் யார் சண்டைப் போட்டு என்ன பிரயோஜனம், அடுத்த வாரம் பிக் பாஸ் சீசனே முடியப் போகுதே என மூன்றாவது புரமோவை பார்த்து ஏகப்பட்ட ரியாக்‌ஷன்களை பிக் பாஸ் ரசிகர்கள் கொட்டி வருகின்றனர்.

பெரிய மனுஷன்

பெரிய மனுஷன்

எத்தனை முறை தன்னை கண்டபடி திட்டினாலும், பாலா மீண்டும் வந்து மன்னிப்பு கேட்டபோதெல்லாம் மன்னித்த ஆரிதான்யா உண்மையாளுமே மனுசன்!.. சல்யூட் ஆரி என்றும், மன்னிப்பு கேட்பவன் மனுஷன்.. மன்னிக்கிறவன் பெரிய மனுஷன் என விருமாண்டி வசனத்தையும் போட்டு ஆரியை பாராட்டி வருகின்றனர்.

அவ்வளவு நல்லவனா நீ

அவ்வளவு நல்லவனா நீ

வழக்கம் போல பாலாவை வீக்கெண்ட்டில் கமல் குறும்படம் போட்டு பாராட்டியதை பார்த்த நெட்டிசன்கள், பாலா அவ்வளவு நல்லவனா நீ என கேட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், இது வீக்கெண்ட் பாலா மீண்டும் வீக் டேஸ் வந்தா மாறிடுவார், இது எப்போ தான் கமல் சாருக்கு புரிய போகிறதோ என்று கலாய்த்து வருகின்றனர்.

கொங்க மக்கா

கொங்க மக்கா

மறுபடியும் ஒரு மாஸ்டர் புரமோவை வசனத்தை போட்டு ஆரியின் கிரேஸை அவரது ஆர்மியினர் ஏற்றி வருகின்றனர். இதுக்கு முன்னாடி குரூபிசம்னால கார்னர் ஆனவங்க, சுவர் ஏறி குதிச்சாங்க.. டிப்ரஷன் ஆகி எவிக்ட் ஆனாங்க.. அப்போதான் பிக் பாஸ் சீசன் 4ல் ஒருத்தன் வந்தான்.. கொங்க மக்கா அப்படியொரு மன வலிமை டா.. தனியாளா நின்னு மாஸ் பண்ணான் என பாராட்டி வருகின்றனர்.

ரொம்ப பணிவு

ரொம்ப பணிவு

வெள்ளி, சனி ஆனா பல்பு பாலா ரொம்ப பணிவு!.. என நாதஸ் செந்தில் போட்டோவை போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர். ஆரி ரசிகர்களும் ஆரியை போலவே பாலாவை மட்டுமே அட்டாக் செய்த விளைவு தான் சோம், ரியோ, கேபி எல்லாம் ஃபைனலுக்கு வர காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இன்டர்நெட்ல கூட

ஆஜீத் செல்வதற்கு முன்னதாக கடந்த வாரம் பாலா, ஆரியை இன்டர்நெட்ல கூட பார்க்க மாட்டேன் என சொன்ன வீடியோ க்ளிப்பை போட்டு, நிஜமாவே பாலா மாறி இருந்தால் முதலில் சந்தோஷப்படுவது ஆரி ரசிகர்கள் தான் என்றும் பாலாவும், ஆரியும் கை கோர்த்து மற்ற ஹவுஸ்மேட்களை அடுத்த வாரம் தெறிக்க விட வேண்டும், இருவரும் வின்னர் மற்றும் ரன்னர் அப்பை வெல்ல வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இவங்க இல்லைன்னா

பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் டாம் அண்ட் ஜெர்ரி, விக்ரம் வேதா எல்லாமே இவங்க ரெண்டு பேரும் தான். இவங்க இல்லைன்னா நிச்சயம் இந்த சீசன் போரடிச்சு இருக்கும். ஆரம்பத்தில் இருந்தே பாலாவும் எனர்ஜியும், ஆரியின் நிதானமும் தான் இந்த ஷோவை பரபரப்பாக்கியது. இவங்க ரெண்டு பேரை வைத்துத் தான் அதிகளவிலான புரமோக்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X